குன்னூரில் 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய முடிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2017 01:07
குன்னூர் : குன்னூர் இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் இந்து முன்னணி சார்பில், 108 விநாயகர் சிலைகள், ஆகஸ்ட் 25ம் தேதி, பிரதிஷ்டை செய்து, 27ம் தேதி ஊர்வலம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
குன்னூர் மார்க்கெட் பகுதியில் மக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; துர்கையம்மன் கோவில் அருகேயுள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூட வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர நிர்வாகி ராஜேஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் கார்த்திக், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், கிரி, கிஷோர் ஆகியோர் பங்கேற்றனர்.