Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் ... மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் ஆடித்தபசு திருவிழா மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் ஆடிப்பூரம் விழா: அம்மனுக்கு தீர்த்தவாரியுடன் வளைகாப்பு உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் ஆடிப்பூரம் விழா: அம்மனுக்கு தீர்த்தவாரியுடன் வளைகாப்பு உற்சவம்

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2017
10:07

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ஆடிப்பூர விழாவில், அம்மனுக்கு நேற்று வளைகாப்பு நடந்தது. இதையொட்டி, சிவகங்கை தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டு தோறும் நடக்கும் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா, மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா, கடந்த, 17ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று ஆடிப்பூர விழாவில், அம்மனுக்கு வளைகாப்பு நடந்தது. இதையொட்டி, அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபி?ஷகம் மற்றும் சிறப்பு பூஜை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கோவிலில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தில், பராசக்தி அம்மனுக்கு தீர்த்தவாரி நடந்தது. இதையடுத்து, பராசக்தி அம்மன், வளைகாப்பு மண்டபத்தில் எழுந்திருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு, அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்று, அம்மனுக்கு வளையல், மஞ்சள், குங்குமம் சாற்றி வழிபட்டனர். இரவில், காமதேனு வாகனத்தில், அருணாசலேஸ்வரர் சமேத உண்ணாமுலையம்மன் வீதியுலா வந்தனர். நள்ளிரவு, 12:00 மணிக்கு, உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் நடந்த தீ மிதி விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar