பதிவு செய்த நாள்
31
ஜூலை
2017
02:07
புதுமாவிலங்கை : புதுமாவிலங்கை கண்டிகை பகுதியில் உள்ள கொளக்காத்தம்மன் கோவிலில், ஐந்தாம் ஆண்டு ஜாத்திரை விழா நடைபெறுகிறது. புதுமாவிலங்கை கண்டிகை, கொளக்காத்தம்மன் கோவிலில், ஐந்தாம் ஆண்டு ஜாத்திரை விழா, கடந்த, 27ம் தேதி, ஊர் சாற்றுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. பின், மறுநாள், மாலை 6:00 மணிக்கு, காப்பு கட்டுதல் நடந்தது. பின், நேற்று முன்தினம், கரக ஊர்வலமும் நடந்தது. இன்று காலை, கரகம் புறப்பட்டு வீடுகளில் கரகம் இறக்குதலும், இரவு வண்ணார கூத்தும் நடைபெறும்.நாளை காலை, 10:30 மணிக்கு, கூழ்வார்த்தலும், காலை, 11:30 மணிக்கு ஜாத்திரை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அடிதானமும் நடைபெறும்.அதை தொடர்ந்து, அம்மன் தாய் வீட்டிற்கு செல்லுதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறும். இரவு, 7:30 மணிக்கு சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் வீதிஉலா நடைபெறும். வரும் 2ம் தேதி, அதிகாலை, 4:30 மணிக்கு, அம்மன் உடை கலைத்தல் நிகழ்ச்சியுடன் ஜாத்திரை விழா நிறைவு பெறும்.