பதிவு செய்த நாள்
31
ஜூலை
2017
02:07
திருத்தணி: திருத்தணி, காந்தி நகரில்உள்ள துர்க்கையம்மன் கோவிலில், நேற்று, ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை என்பதால், காலை, 8:00 மணிக்கு, கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின், திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். அதே போல், திருத்தணி, தணிகை மீனாட்சி அம்மன், முருக்கம்பட்டு பச்சையம்மன், குன்னத்துார் கிராம தேவதையான குன்னத்துார் அம்மன் உட்பட ஒன்றியத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களில், ஆடி மாத ஞாயிற்றுக் கிழமையையொட்டி, காலையில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், மாலையில் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.மேலும், இரவில் மாவிளக்கு பூஜை நடத்தியும் அம்மனை பக்தர்கள் வழிபட்டனர். சில அம்மன் கோவில்களில் இரவில் கும்பம் கொட்டும் நிகழ்ச்சி நடந்தது.