பதிவு செய்த நாள்
31
ஜூலை
2017
02:07
விஸ்வநாதபுரம் : மப்பேடு, ஓசூரம்மன் கோவில். தீமிதி திருவிழா, வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக, கடந்த, 28ம் தேதி, இரவு, 12:00 மணிக்கு காப்பு கட்டுதலுடன் தீமிதி திருவிழா துவங்கியது. தொடர்ந்து, தினமும் காலை, மாலை வேளைகளில் மலர் அலங்காரத்தில் அம்மன் வீதிஉலா நடைபெறும்.வரும் 5ம் தேதி, இரவு, 12:00 மணிக்கு, அக்னி குண்டம் எடுத்தல் நடைபெறும். வரும், 6ம் தேதி, முற்பகல், 11:30 மணிக்கு அங்கபிரதட்சனம் மற்றும் வேப்பிலை நேர்த்திக்கடன் போன்றவற்றை பக்தர்கள் செலுத்துவர்.அன்று, மாலை, 6:00 மணிக்கு, தீமிதி திருவிழா நடைபெறும். தொடர்ந்து, இரவு, 7:00 மணிக்கு, சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் வீதிஉலா நடைபெறும்.