பதிவு செய்த நாள்
02
ஆக
2017
12:08
வாஷிங்டன்: அமெரிக்காவின், அட்லாண்டாவில், காஷ்மீர்ஹிந்துக்களின் குல தெய்வமான, கீர் பவானி கோவில் கட்டப்பட உள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை பூர்வீகமாக உடைய பண்டிட்கள் உள்ளிட்ட ஹிந்துக்கள், தங்கள் குலதெய்வமாக, கீர் பவானியம்மனை வழிபடுகின்றனர். ஸ்ரீநகர் அருகே, துல்முல் கிராமத்தில், கீர் பவானி கோவில் உள்ளது. அரிசியில் பாயாசம் செய்து படைப்பதால், அம்மனுக்கு, கீர் பவானி என, பெயர் ஏற்பட்டது. பயங்கரவாதம் அதிகரித்ததால், பண்டிட்கள் உட்பட ஹிந்துக்கள் பலரும், ஜம்மு - காஷ்மீரை விட்டு வெளியேறி, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வசிக்கின்றனர். அமெரிக்காவில் வசிக்கும், ஜம்மு - காஷ்மீர்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், கீர் பவானிக்கு கோவில் கட்ட முடிவு செய்தனர். இதற்காக, கணிசமான நிதிதிரட்டியுள்ளனர். அட்லாண்டாவில், 11 ஏக்கர் பரப்பளவில், சிவன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் வளாகத்திலேயே, கீர் பவானிக்கும், தனி சன்னதி கட்ட முடிவு செய்து, பணிகள் துவங்கியுள்ளன.