Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்தூர் துளிர் விடும் ... வடமதுரையில் சாட்டையடி பெற்று நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள் வடமதுரையில் சாட்டையடி பெற்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நிலக்கோட்டை உலா வரும் வாகனங்கள்
எழுத்தின் அளவு:
நிலக்கோட்டை உலா வரும் வாகனங்கள்

பதிவு செய்த நாள்

05 ஆக
2017
12:08

நிலக்கோட்டை:  உருவ வழிபாட்டுக்கு பிரசித்தி பெற்ற தமிழகத்தில் சுவாமி சிலைகளின் அழகில் மயங்காதோர் இல்லை. பிரதிஷ்டை செய்தவை, சுயம்பு சிலைகளின் அழகைக் கண்டால் நமக்கு பிரமிப்புதான் ஏற்படும்.

கோயில் தெய்வங்கள் பக்தர்களுக்கு ஆசிவழங்கி பரவசப்படுத்த வீதியுலா செல்கின்றன. அதற்கு உதவும் வாகனங்கள் ரெம்பவே ஆச்சாரமிக்கவை. ஒவ்வொரு வாகனத்திற்கும் தனித்தனி சிறப்பு உண்டு. சிம்மம், குதிரை, கருடன், மயில், அன்னம் இப்படி தெய்வங்கள் தங்களுக்கேற்ற வாகனங்களில் உலாவருவர்.

இந்த வாகனங்கள் எல்லாம் நிலக்கோட்டையில் தயாராகி வருகின்றன என்பது உங்களில் பலருக்குத் தெரியாதுதான். இங்கு சிலைகளின் அழகுக்கு, அழகு சேர்க்க தங்கம், வெள்ளி முலாம் பூசப்பட்ட கவசங்கள், வீதி உலா வரும் உற்சவர், அவரை தாங்கி வரும் வாகனங்கள், திருவாச்சி, கொடிமரம், பூஜை சாமான்கள் எனத் தயாராகும் கோயில் உபகரணங்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

மூன்று தலைமுறையாக இதனை தெய்வீகப் பணியாக கருதி தயாரித்து வருகிறார், நிலக்கோட்டை செந்தில்குமார். அவர் கூறியதாவது: கவசம், சிலைகளை வேறு வேறு முறைகளில் செய்தாலும், மூலப்பொருள் ஒன்றுதான். செம்பு, பித்தளை, தாமிரம் ஆகியவற்றால் கவசம், சிலை உருவாகிறது. தாமிரத்தில் வடிவமைத்த சிலைகளுக்கு வெள்ளி, தங்க முலாம் பூசுவதால் நம் கண்களுக்கு விருந்தாகிறது.

அரை அடியில் இருந்து 10 அடி வரை கவசங்களுக்கு ஆர்டர் கிடைக்கும். சிம்ம வாகனம் உருவாக்கி சில நாட்களுக்கு முன்பு கோயிலுக்கு வழங்கினோம். நம்முடைய கற்பனையில் உருவாவது தான் வாகனங்கள்.

நேர்மறை சிந்தனையோடு உருவாக்கினால் வாகனங்களுக்கும் அழகு கூடும். தெய்வமே அழகுதான். அந்த தெய்வமும் வாகனத்தில் அமர்ந்து வீதியுலா வருவது அழகோ அழகுதான், என்றார்.  இவரிடம் 88839- 38882ல் பேசலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
போத்தனூர்: மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. தைப்பூசம் துவக்கம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் தை மாத கார்த்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar