* நீங்கள் எந்த அளவினால் அளப்பீர்களோ, அதே அளவு உங்களுக்கு திரும்ப அளிக்கப்படுவது மட்டுமின்றி கூடுதலாகவும் கொடுக்கப்படும். * மண் மண்ணுக்குள் திரும்பிப்போகும். கடவுள் கொடுத்த ஆவி அவரிடமே திரும்பிப் போகும். * அழுகிறவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவார்கள். * வானத்தின் உயரம், பூமியின் ஆழம், ராஜாக்களின் அந்தரங்கம் ஆகியவற்றை ஆராய்ந்து அறிய முடியாது. * மாபெரும் மனிதர்கள் அனைவருமே அறிஞர்களாக இருந்து விடுவதில்லை. * அறிவாளியின் வாயில் உள்ள வார்த்தைகள் கருணையானவை. ஆனால் முட்டாள்களின் உதடுகளோ அவனையே விழுங்கி விடும். முட்டாள்களின் பாட்டை கேட்பதை விட அறிவாளிகளின் நிந்தனையைக் கேட்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் அறிவுள்ளவன் வார்த்தைகளை அடக்கி கொள்வான். * எந்த மனிதனாவது தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பான் என்றால், அவனுக்கு எதுவுமே தெரியாது என பொருளாகும். * பலமும் மானமுமே ஒரு பெண்ணின் ஆடைகள்.