Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிருஷ்ணஜெயந்தி விரதமுறையும் பலனும்! இன்று கிருஷ்ண ஜெயந்தி: கண்ணனை நினைக்காத நாளில்லையே! இன்று கிருஷ்ண ஜெயந்தி: கண்ணனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

12 ஆக
2017
05:08

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழாவையொட்டி, அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

அதிகாலை 3 மணிக்கு வெள்ளி பல்லக்கில் கொடிபட்ட வீதி உலா வந்து கோயிலை சேர்ந்தது. அதிகாலை 5:00 மணிக்கு கோயில் இரண்டாவது பிரகார கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மேளதாளங்கள், பஞ்சவாத்தியங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது. காலை 6.20 மணிக்கு கொடிமரத்திற்கு மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து தேவாரம், திருப்புகழ், வேதபாராயணம் முழங்கியது. பின்பு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழக செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர்(பொறுப்பு) பரஞ்ஜோதி, உள்ளிட்டோர் பங்கேற்றனர். இத்திருவிழாவில் வரும் 18ம் தேதி சிகப்பு சாத்தி நிகழ்வும், 19ம் தேதி பச்சை சாத்தி நிகழ்வும் நடக்கின்றன. வரும் 21ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. வரும் 23ம் தேதியுடன் விழா நிறைவடைகிறது. விழா நாட்களில் கோயில் கலையரங்கில் பக்திசொற்பொழிவுகள், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar