தமிழகத்திலேயே மிகவும் உயரமான வழுக்கு மரம் உள்ள கிருஷ்ணன் கோயில், மதுரை வடக்கு மாசி வீதியிலுள்ள நவநீத கிருஷ்ணன் கோயில்தான். திருச்சி பீம்நகர் பகுதியில் வேணுகோபால கிருஷ்ணன் கோயில் உள்ளது. இங்கு அருள்பாலிக்கும் கிருஷ்ணன் சக்தி மிக்கவர். கிருஷ்ண ஜயந்தி அன்று நடைபெறும் உறியடித் திருவிழா இங்கு விசேஷம். அம்பாசமுத்திரம் கோயில் உள்ள வேணுகோபாலன் சிலை நேபாளம் கண்டகி நதியில் கிடைக்கும் சாளக்ராமக் கல்லினால் ஆனது. கிருஷ்ண ஜயந்தியன்று இங்குப் பெருமாளுக்குத் கண்திறப்பு, சங்கில் பால் புகட்டும் வைபவங்களும் நடக்கின்றன. கண்ணன், ராஜகோபலனாக செங்கமலவல்லி நாச்சியாருடன் அருளும் கோயில் கடலூர், புதுப்பாளையத்தில் உள்ளது. திருப்பதி பெருமாளுக்கான காணிக்கைகளை இங்கு சேர்க்கலாம். என்பது ஐதீகம். மூலவர் கோபிநாதராகவும், உற்ஸவர் கிருஷ்ணராகவும், திண்டுக்கல், ரெட்டியார் சத்திரத்தில் அருள்கிறார்கள். இந்தக் கண்ணன் கால்நடைகளைக் காப்பதாக ஐதீகம். கண்ணன், பாமா ருக்மிணியுடன் அருளும் கோயில் மதுரை குரார் கள்ளிக்குடியில் உள்ளது. இங்குள்ள நந்தவனத்தில் உள்ள புளியமரம் பூப்பதோ காய்ப்பதோ இல்லை! செங்கத்தில் பத்மாவதி ஆண்டாளுடன் கண்னண் தரிசனம் தருகிறார். பரம பக்தனான ஏழைக்குப் புதையலைக் காட்டிய பெருமாள் இவர்.
காஞ்சிபுரம் மணிமங்கலத்தில் ராஜகோபலசுவாமி, செங்கமலவல்லி தாயாருடன் கோயில் கொண்டுள்ளார். இங்கே பெருமாள் இடது கையில் சக்கரமும் வலது கையில் சங்கும் ஏந்தியிருப்பது அபூர்வ திருக்கோலமாகும். சென்னை ஆதம்பாக்கம், சாந்தி நகரில் உள்ள பாண்டுரங்கன் கோயில். பண்டரிபுரத்தில் உள்ள கோபுர அமைப்போடு திகழ்கிறது. மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ஒரு காதில் குண்டலமும் மறு காதில் தோடும் அணிந்து காட்சியளிப்பது விசேஷ அம்சமாகும்.