கிருஷ்ண வழிபாடு மிகவும் தொன்மையானது சாந்தோக்ய உபநிஷத்தில் கண்ணன், தேவகியின் மகன் என்ற குறிப்பு உள்ளது. கங்கை, யமுனை ஆற்றங்கரைகளில் கிருஷ்ண வழிபாடு இருந்ததாக மெகஸ்தனிஸ் எழுதியுள்ளார். அலெக்சாண்டருடன் போரிட்டு வெற்றிபெற்ற புருஷோத்தமர் தனது வெற்றிக்குக் காரணம் கிருஷ்ணரே என்று குறிப்பிட்டுள்ளார். மருத்துவத் தொழிலைச் செய்பவர்கள், கிருஷ்ணரை வணங்கியே தொடங்க வேண்டும் எனச் சாணக்கியர் கூறியுள்ளார். தமிழின் தொன்மையான இலக்கியங்களும் கூட கிருஷ்ணர் புகழைப் பாடியுள்ளன. சூரியனை வரவழைத்ததாகக் கிருஷ்ணர் குறித்து புறநானூறு குறிப்பிடுகிறது. கிருஷ்ணரின் அண்ணன் பலராமன் என்ற குறிப்பும், நப்பின்னை பற்றிய செய்திகளும் சிலப்பதிகாரத்தில் இருக்கிறது.