பதிவு செய்த நாள்
16
ஆக
2017
12:08
ஊட்டி : நீலகிரியில், பிரசித்தி பெற்ற ஊட்டி புனித மேரீஸ் தேவாலயத்தின், 179வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. காலை, 9:00 மணிக்கு, மறை மாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் தலைமையில், கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது. இதில், பங்கு குரு வின்சென்ட், குருக்கள் சகாயதாஸ், வில்லியம்ஸ், பீட்டர் சனல், எட்வர்ட் சார்லஸ் ஆகியோர் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர்; திராளாக பக்தர்கள் பங்கேற்றனர்.
மாலை, குரு சோனி தலைமையில் மலையாளத்தில் திருப்பலியும், பின், மறை மாவட்ட
புதிய குருக்கள் தலைமையில் திருப்பலியும் நடந்தது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தேவ அன்னையின் பவனி, பஸ் ஸ்டாண்டு வரை சென்று திரும்பியது.