திருவாடானை, திருவாடானை பஸ்ஸ்டாண்ட் ஆதிரெத்தினகணபதி, பாரதிநகர் லட்சுமி விநாயகர், தொண்டி இரட்டைபிள்ளையார் கோயில்களில் நேற்று முன்தினம் காப்புக்கட்டுதலுடன் விழா துவங்கியது. ஆக. 25ந் தேதி விநாயகர் சதுர்த்தியன்று காலை பால்குடம் எடுத்தல், பூக்குழி இறங்குதல், விநாயகர் ஊர்வலம், இரவில் கலைநிகழ்ச்சி நடைபெறும்.