சிவபெருமான் தவத்தில் ஆழ்ந்திருந்த சமயம், உலகமே இயக்கமின்றி அசைவற்றுப் போனது. அந்த சமயம் பார்வதி, பர்வதராஜனின் மகளாகப் பிறந்து வளர்ந்து கொண்டிருந்தாள். படைப்புக் கடவுளான பிரம்மா செய்வதறியாது தவித்தார். தன் தம்பியான மன்மதனிடம், “தம்பி! மலர்க்கணை தொடுத்து சிவனின் தவத்தை கலைத்துவிடு. பர்வத ராஜனின் மகளான பார்வதியை சிவன் திருமணம் புரியும்படி செய்,” என்று கட்டளையிட்டார். அண்ணனின் கட்டளையை ஏற்ற மன்மதனும் சிவனின் தவத்தைக் கலைத்தான். சிவனோ, தன் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்து சாம்பாலாக்கி விட்டார்.