Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவணி அமாவாசை: திருத்தணி கோவிலில் ... குருவித்துறையில் குருபெயர்ச்சி விழா: ஆக.31ல் லட்சார்ச்சனை குருவித்துறையில் குருபெயர்ச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகையில் தங்க மீன் விடும் வைபவம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
நாகையில் தங்க மீன் விடும் வைபவம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

23 ஆக
2017
10:08

நாகப்பட்டினம்: அதிபத்த நாயனாருக்கு, சிவபெருமான் காட்சிஅளித்ததை நினைவுக்கூரும் வகையில், கடலில் தங்க மீன் விடும் வைபவம் நேற்று நடந்தது. பண்டைய காலத்தில், நாகை, நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் பிறந்தவர், அதிபத்தர். சிவன் மீதுள்ள பக்தியால், கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது, ஒவ்வொரு நாளும், வலையில் சிக்கும் முதல் மீனை, சிவனை நினைத்து, கடலில் விடுவது அதிபத்தரின் வழக்கம்.

திருவிளையாடல் : அதிபத்தரின் பக்தியை சோதிக்க விரும்பிய சிவன், சில நாட்கள், அதிபத்தரின் வலையில் மீன்கள் சிக்காமல் இருக்குமாறு செய்தார். இதனால், அவரது குடும்பம் வறுமையில் வாடியது. அதன்பின், அதிபத்தரின் வலையில், நாள்தோறும், ஒரே ஒரு மீன் மட்டுமே கிடைக்கும் படி, சிவன் திருவிளையாடல் செய்துள்ளார். வறுமையில் வாடிய நிலையிலும், வலையில் சிக்கும் ஒரு மீனையும், வழக்கம் போல இறைவனை நினைத்து, கடலில் விட்டு, வெறுங்கையுடன் வீட்டிற்கு திரும்புவதை வாடிக்கையாக கொண்டார். உணவின்றி குடும்பத்தினர் வறுமையில் வாடிய நிலையில், ஒருநாள், அதிபத்தரின் வலையில், நவரத்தினங்களால் ஆன, தங்க மீன் சிக்கியுள்ளது. தங்க மீனாயினும் தயங்காது, இது, அருட்கூத்தாடும் எம்பெருமான் சிவனுக்கு உரியது என, மகிழ்வோடு கடலில் விட்டுள்ளார்.

வரவேற்பு : அதிபத்தரின் தீவிர பக்தியை மெச்சிய சிவன், நடுக்கடலில், ரிஷப வாகனத்தில் தேவியருடன் எழுந்தருளி, அதிபத்தருக்கு காட்சியளித்தார். இதையடுத்து, 63 நாயன்மார்களில் ஒருவராக, அதிபத்தர் போற்றப்படுகிறார். அதிபத்த நாயனாருக்கு, சிவன் காட்சியளித்த தினத்தை நினைவுக்கூரும் வைபவம், நாகையில் நேற்று நடந்தது. நீலாயதாட்சி அம்மன் கோவிலில், ரிஷப வாகனத்தில் சிவன், தேவியருடன் எழுந்தருளினார். நம்பியார் நகர் மீனவ கிராம மக்கள், மேள தாளம், மங்கள வாத்தியங்கள் முழங்க, சிவனையும், அதிபத்த நாயனாரையும், நாகை கடற்கரைக்கு அழைத்து சென்றனர். புதிய கடற்கரையில், ஆரியநாட்டுத் தெரு கிராம மீனவர்கள், சீர்வரிசையுடன் வரவேற்றனர். சிவன் மற்றும் அதிபத்த நாயனாருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அதிபத்த நாயனார், பைபர் படகில் சென்று, கடலில் தங்க மீன் விடும் வைபவம் நடந்தது. திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar