Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கணபதியை கொண்டாடிய முஸ்லிம் ... பரமக்குடியில் விநாயகர் சதுர்த்தி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2017
12:08

திருப்பூர்: விநாயகர் சதுர்த்தி விழா, திருப்பூரில் வழக்கமான உற்சாகத்துடன், நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களிலும், பிற கோவில்களில் <உள்ள விநாயகர் சன்னதியிலும், சிறப்பு பூஜைகள் நடந்தன. கணபதி ஹோமம், சிறப்பு அபிசேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, அதை தொடர்ந்து நடந்த அன்னதானம் நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். டவுன் ஹால் செல்வ விநாயகர் கோவில், குலாலர் பிள்ளையார் கோவில், செரீப் காலனி சித்தி விநாயகர், ஜான்ஜோதி கார்டன் செல்வ விநாயகர், எஸ்.ஆர்., நகர் நவக்கிரக விநாயகர்,

கருவம்பாளையம் மேற்கு விநாயகர் கோவில், எஸ்.வி., காலனி வலம்புரி ரத்தின விநாயகர், ராயபுரம் ராஜ விநாயகர், மண்ணரை செல்வ விநாயகர்; டிமாண்ட் வீதி சித்தி விநாயகர், கோர்ட் வளாகம் நீதி விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் நடந்த சதுர்த்தி விழா பூஜைகளில் பெருந்திரளானோர் பங்கேற்றனர். அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமி கோவில், கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில், அலகுமலை பால தண்டாயுதபாணி கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும், சிறப்பு பூஜைகள் நடந்தன. பல்லடம், தாராபுரம், காங்கயம், வெள்ளக்கோவில், ஊத்துக்குளி வட்டார கோவில்களில், சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன. இதுதவிர, வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களிலும், விநாயகர் சிலை அமைத்து, சிறப்பு பூஜைகள் நடந்தன. பல்வேறு விதமான விநாயகர் சிலைகளை வீடுகளில் அலங்கரித்து வைத்து, பொதுமக்கள் வழிபட்டனர்.

இந்து முன்னணி: இந்து முன்னணி சார்பில், மாவட்டம் முழுவதும் ஏறத்தாழ, ஐந்தாயிரம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மூன்று அடி முதல், 11 அடி வரை உயரமுள்ள சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன.  மெர்சல் விநாயகர், ஜல்லிக்கட்டு காளை மீது அமர்ந்துள்ள விநாயகர்; சிம்ம வாகனம், மயில் வாகனம், ரிஷப வாகனம், மான் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மீதமர்ந்தவாறு அருள் பாலிக்கும் விநாயகர் சிலைகள், பக்தர்களை வெகுவாக ஈர்த்தன. ராமமூர்த்தி நகரில், பெண்களுக்கான கோலப்போட்டி நடந்தது. புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், அன்னதானம் வழங்கப்பட்டது. வரும், 28ம் தேதி விசர்ஜன ஊர்வலம், ஆலாங்காட்டில் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் 10ஆம் நாள் அண்ணாமலையார் மலையில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயில் ரோப் கார் சேவை பழுது அடைந்த கியர்பாக்ஸ் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar