தர்மநெறி தவறாதவர் என்பதால் தான் எமனை எமதர்மன் என்றே குறிப்பிட்டனர். ஒருவர் செய்த பாவ, புண்ணியத்தை கணக்கில் கொண்டு மட்டுமே அவர் உயிரைப் பறிக்கிறார். செல்வந்தர், ஏழை, வாலிபர், வயோதிகர் என்ற பாரபட்சம் எல்லாம் எமனுக்கு கிடையாது. எல்லாருக்கும் அவரது சந் நிதியில் ஒரே தீர்ப்பு தான். இப்படி தர்மம் தவறாத அவரை, தர்மராஜன் என்று அழைப்பது மிகவும் பொருத்தம். அவரைக் கட்டுப்படுத்தும் சக்தி தர்மத்திற்கு மட்டுமே உண்டு என்பதாலும் இவ்வாறு அழைக்கப்படுகிறார்.