கோயிலை நிர்மாணிக்கும் போதே தலவிருட்சத்தையும் முடிவு செய்து விடுவார்களா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2017 03:08
தலவிருட்சம் உள்ள கோயில்கள் பழமையானவை. அதன் புராதனப் பெயர்களைகேட்டாலே, இதற்கான பதில் கிடைத்து விடும். மதுரையின் புராணப்பெயர்களில் கடம்பவனம் என்பதும் ஒரு பெயர். ஏனென்றால், கடம்ப மரங்கள் சூழ்ந்த காட்டில், தனஞ்ஜெயன் என்னும் வணிகருக்கு சொக்கநாதர் காட்சியளித்தார். இங்கு தலமரம் கடம்பு. எனவே, யாரும் இதை முடிவு செய்வதில்லை.ஏற்கனவே முடிவாகி இருப்பது தான்.