பதிவு செய்த நாள்
31
ஆக
2017
12:08
ஹர்தா: மத்திய பிரதேச மாநிலத்தில், மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக, ஹிந்து கோயிலுக்கு, முஸ்லிம் அமைப்பினர் ஒலிபெருக்கி வாங்கித் தந்த சம்பவம் நடந்துஉள்ளது. ஹர்தா மாவட்டத்தில் உள்ள, ஹனுமன் கோயிலில் இருந்த, உண்டியல் மற்றும் ஒலிபெருக்கி, சமீபத்தில் கொள்ளையடிக்கப்பட்டது. உண்டியல் மீட்கப்பட்ட நிலையில், ஒலிபெருக்கியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், உள்ளூர் முஸ்லிம்கள், புதிய ஒலிபெருக்கியை வாங்கி, கோயில் நிர்வாகக் குழுவிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து முஸ்லிம் கமிட்டி தலைவர், ஷாஹித் கான் கூறியதாவது: தினமும், கோவிலில் பக்திப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு வந்தன. கடந்த சில நாட்களாக, பக்திப் பாடல்கள் ஒலிபரப்பாகவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது, ஒலிபெருக்கி காணாமல் போனது தெரிய வந்தது. எனவே, நாங்கள் புதிய ஒலிபெருக்கியை வாங்கி, கோயில் நிர்வாகத்திடம் அளித்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.