சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரத்தில் சம்வத்ஸரா அபிஷேகம் நடந்தது. தியாகராஜபுரம் லஷ்மிநாராயணபெருமாள் கோவிலில் 11 வது ஆண்டு கும்பாபிஷேக தினவிழா நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு பால்,தயிர், பஞ்சாமிர்தம்,இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பிரதோஷ வழிபாட்டு மன்ற தலைவர் விசுவநாத கனபாடிகள் தலைமையில் வேத விற்பன்னர்கள் பங்கேற்ற யாக,கலச பூஜை நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.