பதிவு செய்த நாள்
02
செப்
2017
03:09
அரக்கோணம்: அரக்கோணம் அருகே, மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த, எஸ்.ஆர்., கண்டிகையில் உள்ள, வீர ஆஞ்சநேயர் கோவிலில், கிரீன் சேவர் அறக்கட்டளை சார்பில், மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. கோவில் கமிட்டி தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். அறக்கட்டளை தலைவர் கோட்டீஸ்வரி வரவேற்றார். கோவில் வளாகத்தில், 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. பசுமை காப்பாளர்கள் சுந்தரவேலு, வேலு, சம்பத், பலராமன், ரவி, ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர்.