பதிவு செய்த நாள்
04
செப்
2017
01:09
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தாசநாயக்கன்பாளையம் ரங்கநாதப் பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் கோவில் விமான கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. விழாவையொட்டி, நேற்று மாலை, 3:00 மணி முதல், 9:00 மணி வரை முதற்கால யாக பூஜை, திருவிளக்கு பூஜை, பல்வேறு வகையான ேஹாமங்கள் நடந்தது. தொடர்ந்து, இன்று காலை, 5:00 முதல், 5:30 மணிக்குள் ேஹாமங்கள், பூர்ணாஹுதி, பத்து வகை தானங்கள், காலை, 6:15 முதல், 6:30 மணிக்குள், கும்பங்கள் புறப்பாடு, மகாகும்பாபிஷேகம், காலை, 7:00 மணிக்கு அன்னதானம் நிகழ்ச்சியும் நடக்கிறது. அருகிலுள்ள, செல்வ விநாயகர் கோவிலில், கும்பாபிஷேக விழாவையொட்டி, நேற்று மாலை, 6:00 மணிக்கு விக்னஷே்வர பூஜை, முதல்கால வேள்வி, தீபாராதனை, இரவு, 8:30 மணிக்குள் அஷ்டபந்தனமருந்து சாற்றுதல் நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று, காலை, 4:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, காலை, 5:00 முதல், 5:45 மணிக்குள், செல்வ விநாயகர் கும்பாபிஷேகம், தசதானம், தசதரிசனம், மகா அபிஷேகமும், காலை,7:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.