கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அருகே, புதிதாக கட்டப்பட்ட அங்காளபரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பூர் கிராமத்தில், புதிதாக அங்காளபரமேஸ்வரி கோவில் கட்டப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேகம் விழா, கடந்த, 2ல் துவங்கியது. மாயனூர் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனித நீர் கொண்டுவந்தனர். தொடர்ந்து முதல் கால யாக சாலை பூஜை துவக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து நேற்று அதிகாலை, இரண்டாம் கால யாக பூஜைகள் துவங்கின. அதன்பின், கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து, மூலவர், பாரிவார சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், கருப்பூர் சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.