பதிவு செய்த நாள்
04
செப்
2017
01:09
மடத்துக்குளம் : மடத்துக்குளம் ஜோத்தம்பட்டி உச்சிமாகாளியம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மடத்துக்குளம் அருகேயுள்ள ஜோத்தம்பட்டி உச்சிமாகாளிம்மன்கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த முதல் தேதி காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. காலை, 10:00 மணிக்கு அமராவதி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்தனர். விழாவில் நேற்று, அதிகாலை, 3:30 மணிக்கு மகாகணபதி ஹோமம், காயத்ரி யாகம், 5:45 மணிக்கு மேல் விநாயகர், உச்சிமாகாளியம்மன், மாரியம்மன், குருபகவான், மகாவிஷ்ணு, துர்க்கையம்மன், கன்னிமார் கருப்பணசாமி, பட்டத்தரசியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது.