புரட்டாசி வளர்பிறை சதுர்த்தியில் மேற்கொள்வது சித்திவிநாயகர் விரதம். இதன் மகிமையை அறிந்த தர்மபுத்திரர், விநாயகரை வழிபட்டு போரில் வெற்றி பெற்றார். சித்தி என்பதற்கு வெற்றி என்பது பொருள். இந்த விரதம் மேற்கொண்டால் செய்யாத குற்றத்தால் உண்டாகும் வீண்பழி, அபவாதம் நீங்கும். சத்ராஜித் என்னும் யாதவ மன்னனிடம் இருந்த சியமந்தகமணி என்னும் ஆபரணத்தை திருடியதாக, கிருஷ்ணர் மீது வீண்பழி ஏற்பட்டது. அதிலிருந்து விடுபட அவர் சித்தி விநாயகர் விரதம் மேற்கொண்டார். வீண்பழி நீங்கி வாழ்வில் வெற்றி பெற விரும்புவோர், செப்.24ல் சித்தி விநாயகர் விரதம் மேற்கொள்ளலாம்.