கோயில்களில் வில்வம், வேம்பு, அரச மரம் இருந்தாலும் விநாயகர் வீற்றிருக்கும் அரசமரத்தை மட்டும் சுற்றுவது வழக்கம். ஆனால், விஜயதசமியன்று வன்னி மரத்தை சுற்றி வர நினைத்தது நிறைவேறும். பாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழ்ந்த காலத்தில் நவராத்திரி விரத காலம் வந்தது. தங்களின் ஆயுதங்களை வன்னி மரத்தடியில் வைத்து, பராசக்தியை வழிபட்டு வந்தனர். விஜயதசமியன்று அம்மனை வழிபட்டு ஆயுதங்களை எடுத்து கொண்டனர். அதன்பின் மகாபாரத போரில் ஈடுபட்டு வெற்றியடைந்தனர். இந்நாளில் (செப்.30) வன்னி மரத்தை 21 முறை வலம் வந்தால், நினைத்தது நிறைவேறும்.