கணபதி என்ற பட்டத்தை சிவபெருமான் விநாயகருக்கு ஏன் கொடுத்தார் தெரியுமா? வேத கணங்களுக்கு அதிபதி என்ற பட்டத்தை யாருக்குக் கொடுப்பது என்று யோசித்த சிவபெருமான், விநாயகரையும் முருகனையும் அழைத்தார். உங்களில் யார் முதலில் உலகத்தைச் சுற்றி வருகிறீர்களோ அவரை என்னைச் சுற்றியுள்ள கணங்களுக்குத் தலைவன் ஆக்குகிறேன் என்றார் முன்பு ஒருமுறை இதேபோன்ற போட்டியில் ஏமாந்த முருகன், இந்தத் தடவை தாய் தந்தையரை சுற்றி சுற்றி வந்தார். ஆனால் விநாயகரோ, ராம நாமத்துக்குள் இந்தப் பிரபஞ்சமே அடங்கியுள்ளது. என்ற ரகசியத்தைத் தெரிந்து, பெற்றோர் முன்னிலையில் ராமர் என எழுதி அதைச் சுற்றி வந்து வெற்றி பெற்றார். கணபதி பட்டமும் தந்தை சிவபெருமானால் கிடைக்கப் பெற்றார்.