தர்மபுரி அதியமான் கோட்டையில் உள்ளது கால பைரவர் திருக்கோயில் 64 பைரவ மூர்த்திகளில் ஒருவரான உன்மத்த பைரவர் இங்கு எழுந்தருளியுள்ளார். இக்கோயில் மேற்கூரையில் நவக்கிரக சக்கரம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் இவர் திருமேனியில் அடக்கமாகியுள்ளதாக, ஐதீகம். மேஷ ராசிக்காரர்கள் இவர் சிரசினைப் பார்த்து வழிபட்டால் தோஷம் தீரும். அதேபோல், ரிஷபம் கழுத்து, மிதுனம்புஜம், கடகம் மார்பு, சிம்மம்வயிறு, கன்னி குறி, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு முட்டியின் மேல்பகுதி, மகரம் முட்டியின் கீழ்ப்பகுதி, கும்பல் கனுக்கால், மீனம் பாதம் என்று அந்தந்தப் பகுதிகளுக்குரிய நட்சத்திரங்களைப் பார்த்துக் கும்பிட்டால் தோஷம் தீரும். இக்கோயிலில் நினைத்த காரியம் நிறைவேற, சாம்பல் பூசணி விளக்கேற்றி, கோயிலை எட்டு அல்லது பதினெட்டு முறை வலம்வருகின்றனர் பக்தர்கள். இந்த வழிபாட்டை பன்னிரெண்டு ஞாயிற்றுக்கிழமைகள் மூன்று தேய்பிறை அஷ்டமி தினங்களில் செய்தால் பலன் நிச்சயம்.