சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த பொய்குனம் மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின் அலங்கரிக்கபட்ட தேரில் அம்மன் வீதியுலா நடந்தது. சங்கராபுரம் எம்.எல்.ஏ., உதயசூரியன், கள்ளக்குறிச்சி எம்.பி., காமராஜ், முன்னாள் சேர்மன் அரசு, தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.