கெங்கவல்லி: கெங்கவல்லி, வீரகனூர் தென்கரையில் தேர் திருவிழா நடந்து வருகிறது. கெங்கவல்லி வட்டம், வீரகனூர் தென்கரையில், மகாசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த, 25 அன்று பூச்சாட்டுதல் மற்றும் சக்தி அழைப்புடன் விழா தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு கட்டளைதாரர்கள் உதவியுடன், தினமும் புஷ்ப மின் அலங்காரத்தில் அம்மன் ஊர்வலம் நடந்தது. நேற்று காலை, 10:00 மணியளவில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். நாளை இரவு, 10:00 மணிக்கு சத்தாபரணம், புஷ்ப அலங்காரத்துடன் சுவாமி ஊர்வலம் நடக்கிறது. வரும், 7 அன்று, மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.