கரூர்: கரூர் அரசு காலனியில் உள்ள மகா புற்றுக்கண் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி, கடந்த, 31ல், கணபதி வேள்வி, நவகிரக வேள்வி உள்ளிட்ட வேள்விகள் நடந்தன. கடந்த, 1ல், காவிரியில் இருந்து பக்தர்கள் புனித நீர் எடுத்து வந்தனர். சிறப்பு அபிஷேகம், கோபூஜை, அஸ்வபூஜை, முதற்கால யாகவேள்வி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. மறுநாள் திருப்பள்ளியெழுச்சி, திருமுறைப் பாராயணம், காலசாந்தி பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை, கோவில் கலசத்துக்கு புனித நீர் ஊற்றி, சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் நடத்தினர்.