பதிவு செய்த நாள்
05
செப்
2017
03:09
திருவள்ளூர் : திருவள்ளூர், வேம்புலி அம்மன் கோவிலில், ஜாத்திரை விழா நடந்து வருகிறது. திருவள்ளூர், வேம்புலி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும், 10 நாட்கள் ஜாத்திரை விழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான ஜாத்திரை விழா, 1ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. திருவிழாவின் ஐந்தாம் நாளான, இன்று மாலை, அம்மனுக்கு கோலம் கொண்ட அம்மன் கோவிலில் இருந்து, தங்கை வீட்டு சீர்வரிசை கொண்டு வரப்பட உள்ளது. வரும், 9ல், பால் கும்ப விழா நடக்கிறது. 10ம் தேதியுடன், ஜாத்திரை விழா நிறைவு பெறுகிறது.