பதிவு செய்த நாள்
07
செப்
2017
01:09
தர்மபுரி: தர்மபுரி குப்பாகவுண்டர் தெருவில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, திரளான பெண்கள், நேற்று மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர். தர்மபுரி குப்பாகவுண்டர் தெருவில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 1ல் துவங்கியது. 2ல், காவடி ஆட்டமும், பள்ளி குழந்தைகளின் நடன நிகழ்ச்சியும் நடந்தது. 3ல், கொடியேற்றம் மற்றும் கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. 4ல், மகா மாரியம்மனுக்கு, பொங்கல் வைத்து, முப்பூஜை செய்யப்பட்டது. கடந்த, 5ல், அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று, பெண்கள் மாவிளக்கை எடுத்து, முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் வந்து அம்மனை வழிபட்டனர்.