ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆடி முதல் முளை கொட்டு திருவிழாக்கள் நடக்கும். அம்மன் கோயில்களில் முளைப்பயிர் வளர்த்து, அதனை எடுத்து ஊர்வலமாக சென்று நீர் நிலைகளில் கரைப்பார்கள். பொங்கல் விழா கிராமங்களில் சிறப்பாக நடக்கும். அழகன்குளம் சாமிதோப்பு பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் பகுதியில் முளை கொட்டு திருவிழா துவங்கியது. பொங்கல், மாவிளக்கு வைத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பக்தர்கள் 15 அடி நீள வேல் அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர். பின் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலையில் கரைக்கப்பட்டது.