வேடசந்துார், வேடசந்துார் அருகே உள்ள ஆத்துப்பட்டி காளியம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் நடந்தது. தீர்த்தம் அழைத்தல், கணபதி பூஜையை தொடர்ந்து காளியம்மன் கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. விழாவில், ஆத்துப்பட்டி, விட்டல்நாயக்கன்பட்டி, காமாட்சிபுரம், அகரம், தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.