பதிவு செய்த நாள்
07
செப்
2017
01:09
வாழப்பாடி: வாழப்பாடி, பெரியசாமி நகரில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில், கடந்த, 28ல், முகூர்த்தகால் நடுதல் மற்றும் முளைப்பாரி இடுதல், கங்கணம் கட்டுதலுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு, கணபதி ஹோமம் நடந்தது. நேற்று அதிகாலை, 5:30 மணி முதல், 9:00 மணிக்குள் மங்கள இசை, தமிழ் திருமுறை பாராயணம், கோ பூஜை, கடம் புறப்பாடு மற்றும் தீபாராதனை நடந்தது. காலை, 9:00 மணிக்கு மேல், கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர்.