பதிவு செய்த நாள்
07
செப்
2017
01:09
திண்டிவனம்: நல்லாவூரில் நடந்த கோவில் கும்பாபிஷேகத்தில், புதுச்சேரி முதல்வர் கலந்துக் கொண்டார். திண்டிவனம் அடுத்த நல்லாவூரில் உள்ள சுந்தர விநாயகர் கோவில், நுாதன ராஜகோபுர மாரியம்மன் மற்றும் கங்கை அம்மன் கோவில்களுக்கு, நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, நேற்று காலை கடம் புறப்பாடு செய்யப்பட்டு, காலை 9:30 மணிக்கு சுந்தர விநாயகர் விமானம், மூலவர் கும்பாபிஷேகமும், 9:45 மணிக்கு ராஜகோபுரம், மகா மாரியம்மன், கங்கைஅம்மன் கோவில் விமான கும்பாபிஷேகம், காலை 10:15 மணிக்கு மூலவருக்கு கும்பாபிஷேகமும் நடந்தது. மயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள், தலைமையில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். புதுச்சேரி எம்.எல்.ஏ.,அனந்தராமன், பா.ம.க., மாநில துணைத்தலைவர் கருணாநிதி, நிர்வாகிகள் சிவக்குமார், மாவட்ட செயலாளர் பிரபு, குமரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வாசுதேவன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.