அழகு முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2017 05:09
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள வாகுடியில் அழகு முத்துமாரியம்மன் கோயிலில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், நீர் நிலைகள் நிரம்ப வேண்டியும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோயிலுக்கு முன்பாக முளைப்பாரி ஓடுகளில் நவதானியங்களை கொண்டு முளைப்பாரிகள் வளர்க்கப்பட்டன. தினமும் மாலை கிராமத்தைச்சேர்ந்த பெண்கள் முளைப்பாரி திண்ணை முன்பு கும்மி கொட்டி குலவையிட்டு பாடல்கள் பாடினர். கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரிகளை கண்மாயில் கரைத்தனர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது.ஏற்பாடுகளை கிராம மக்கள், விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.