நாகர்கோவில் : ஆவணி கடைசி ஞாயிறை முன்னிட்டு நாகர்கோவில் நாகராஜா கோயிலில் பக்தர்கள் நாகருக்கு பால் ஊற்றி வழிபட்டனர்.நாகரை மூலவராக கொண்ட அரிய கோயில்களில் ஒன்று நாகர்கோவில் நாகராஜா கோயில். இங்கு மூலஸ்தானம் இன்னும் ஓலைக் கூரையில்தான் உள்ளது. இங்கு பாம்பு புற்றுமண் பிரசாதமாக வழங்கப்படுகிறது.நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டால் பெண்களுக்கு திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை. இதனால் ஞாயிற்றுக் கிழமைகளில் அதிக அளவில் பெண் பக்தர்கள் வருவர்.ஆவணி ஞாயிறு அன்று இங்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். ஆவணி மாத கடைசி ஞாயிறான நேற்று அதிகாலை 4:00 மணிக்கே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பெண்கள், நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டனர்.மதியம் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு பால் பாயாசம் வழங்கப்பட்டது.