Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழந்தமிழர்களின் பொக்கிஷம் திருமலை திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கிருத்திகை விழா திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணியில் கிருத்திகை விழா காவடிகளுடன் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
திருத்தணியில் கிருத்திகை விழா காவடிகளுடன் பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

12 செப்
2017
11:09

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த, ஆவணி மாத கிருத்திகை விழாவில், திரளான பக்தர்கள் காவடிகளுடன் வந்து, மூலவரை வழிபட்டனர். திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, ஆவணி மாத கிருத்திகை விழா நடந்தது. அதிகாலையில், மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்கவேல், தங்க கீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, மூலருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 9:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமானுக்கு காவடி மண்டபத்தில் விபூதி, பால், பன்னீர், இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.தொடர்ந்து, வண்ண மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானையுடன், வெள்ளி மயில்வாகனத்தில், சிறப்பு அலங்காரத்தில் மாட வீதியில் வலம் வந்தார். தமிழகம் உட்பட, பல்வேறு மாநிலங்களில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து வழிபட்டனர். மொட்டை அடித்தும், காவடிகள் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பொது வழியில், இரண்டு மணி நேரம், நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர். சத்திய சாட்சி கந்தன் கோவில்: இதே போல், சத்திய சாட்சி கந்தன் கோவிலில், நேற்று கிருத்திகை விழா நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், உச்சி கால பூஜையும், மாலை, சிறப்பு தீபாராதனையும் நடந்தது. திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar