திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் தாழக்கோவிலான திரிபுர சுந்தரியம்மன் கோவிலில,் நவராத்திரி பெருவிழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக திருக்கழுக்குன்றம் வேதிகிரீஸ்வரர் கோவில் விளங்குகிறது. தாழக்கோவிலாக பக்தவச்சலேஸ்வரர் கோவில், ஐந்து ராஜகோபுரங்களுடன் தனிச்சிறப்புடன் அமைந்துள்ளது.இங்குள்ள திரிபுர சுந்தரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திரிபுரசுந்தரியம்மனுக்கு ஒரு ஆண்டில் மூன்று நாட்கள் தான் அபிஷேகம் நடைபெறும். அந்த நாட்களில் நவராத்திரி சரஸ்வதி பூஜை நாளும் ஒன்றாகும். அதன்படி சிறப்ப ுமிக்க அம்மன் கோவிலில் இந்தாண்டு நவராத்திரி பெருவிழா இன்று தொடங்குகிறது. இதனை ஒட்டி தினசரி திரிபுர சுந்தரியம்மன் நாகம், வீணை, புத்தகம் படித்தல் ,ஊஞ்சல் சேவை உள்ளிட்ட அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். வரும், 29ம் தேதி சரஸ்வதி பூஜை அன்று மூலவர் திரிபுர சுந்தரி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவை ஒட்டி லலிதா சகஸ்ரநாம அர்ச்னை, பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகளும் உபயதாரர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.