Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நவராத்திரி கொண்டாட்டம்: பெருமாள் ... நெருப்பூர் முத்தத்திராயன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆலய தரிசனத்திற்கு வழிகாட்டி புத்தகம் இந்து அறநிலையத்துறையினர் வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2017
01:09

ஸ்ரீவில்லிபுத்துார், தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் மாவட்டத்தின் ஒவ்வொரு தாலுகாவிலும் இருக்கும் கோயில்களை பற்றிய முழு விபரங்களை, அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், விருதுநகர் மாவட்ட திருக்கோயில்கள் வழிகாட்டி புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள்கோயில், திருவண்ணாமலை பெருமாள் கோயில், மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில், ராஜபாளையம் மயூரநாதசுவாமி, தேவதானம் நச்சாடை தவிர்த்தருளியசுவாமி, சிவகாசி விஸ்வநாதசுவாமி, திருத்தங்கல் நின்றநாராயணப்பெருமாள், இருக்கன்குடி மாரியம்மன், விருதுநகர் சொக்கநாதசுவாமி, அருப்புகோட்டை அமுதவல்லி கோயில், திருச்சுழி திருமேனிநாதசுவாமி கோயில் என ஒவ்வொரு தாலுகாவிலும் பிரபல கோயிலை அப்பகுதி மக்கள் அறிந்திருப்பார்கள்.

சிறப்பு பூஜை விபரம்: அத்தகைய கோயில்களின் தலவரலாறு, திருவிழாக்கள், சிறப்பு பூஜை விபரங்கள் என பல தகவல்களை பெரும்பாலானோர் முழுவிபரங்களை அறிந்திருப்பதில்லை. இந்நிலையில் விருதுநகர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் 42 கோயில்கள் மிகவும் புராதானமிக்க கோயில்கள் என்பது மிகவும் ஆச்சரியப்படவேண்டிய விஷயம். இந்த கோயில்கள் என்னென்ன என்பதை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து சுவாமி தரிசனம் செய்யவேண்டும்.

42 கோயில்கள்: மாவட்டத்தின் வடகிழக்கு பகுதியான திருச்சுழி முதல் தென்மேற்கு பகுதியான தேவதானம் வரை 42 கோயில்கள் குறித்த விபரங்களை நுாறு பக்க புத்தகமாக தொகுத்து அனைத்து விபரங்களையும் தந்துள்ளது விருதுநகர் மாவட்ட இந்துசமய அறநிலையத்துறை. இப்புத்தகத்தில் ஒவ்வொரு கோயில்களின் அமைவிடம், தலவரலாறு, தனி சிறப்பு, கல்வெட்டு தகவல்கள், நடை திறக்கும் நேரம், முக்கிய திருவிழாக்கள் விபரம், பஸ் போக்குவரத்து, பக்தர்கள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண், இமெயில் முகவரிகள், தினசரி பூஜை விபரங்கள் என பல்வேறு தகவல்கள் தெரிவிக்கபட்டுள்ளது. இப்புத்தகம் ஒவ்வொரு கோயிலிலும் விற்பனைக்கு உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் இன்று முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர் கோவிலில் 5 தேர்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை கிரௌஞ்சமலை கனக்சௌரி கார்த்திக் சுவாமி கோயிலில் ... மேலும்
 
temple news
கொடைக்கானல், கொடைக்கானலில் வைகாசி விழாவையடுத்து அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. கொடைக்கானல் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி கனியாக பரமேஸ்வரி ஜெயந்தியை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar