Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை நன்மைதருவார் கோயிலில் ... திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் புரட்டாசி சனி வழிபாடு திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரம் தரும் நவராத்திரி
எழுத்தின் அளவு:
வரம் தரும் நவராத்திரி

பதிவு செய்த நாள்

23 செப்
2017
05:09

புரட்டாசி மாதம் 5 ந்தேதி 21.09.2017 வியாழன் முதல் புரட்டாசி 14ந்தேதி 30.09.2017 சனிக்கிழமை விஜயதசமி முடிய பத்துநாட்கள் நவராத்திரிப்பெருவிழா ஆலயங்களிலும் இல்லங்களிலும் கொண்டாடப்படவுள்ளது. முக்கியமாக இல்லங்களில் கொலுவைப்பதும் சிறார்களுக்கு சுண்டல் இனிப்புகள் அளித்தும் வீட்டிற்குவரும் சுமங்கலிகளுக்கு  மங்களப் பொருட்கள் அளிப்பதும் ஆகியவைகளினால் நம் வீடுகளில்  பத்துநாட்களுமே பண்டிகைக்கோலம்தான். நவராத்திரி என்பது கோயில்களில் பொதுஇடங்களில் இல்லங்களில் இப்படி பலரும் பலவிதமாகக் கொண்டாடினாலும் தாய்மையின் கருணையைப் போற்றும் தாய்க்குலத்தின் விழா என்றே சொல்லலாம். ஸ்ரீதேவி பராசக்தியானவள் உலகிற்கே தாயாக விளங்குபவள். தேவர்கள் மனிதர்கள் விலங்குகள் என எல்லோருக்கும் அன்னையாகிய அவள் தம் குழந்தைகளுக்குத் துன்பம் ஏற்பட்டால் ஓடோடி வந்து இன்னல் களைந்து அருளுவாள். அரக்கர்கள் முதலிய தீயசக்திகளால் தேவர்களுக்கும் மனிதகுலத்திற்கும் துன்பம் நேராமல் எல்லோரும் மகிழ்ச்சியாய் வாழ அம்பிகை விரதம் இருந்து மகிஷாஸுரன் முதலியவர்களை அழித்து நமக்கு அருள்பாலித்ததை னைவுகூர்ந்து அன்னைபராசக்தியை துர்க்கா லட்சுமி சரஸ்வதியாக வழிபடுவதே நவராத்திரிவிழாவின் நோக்கமாகும்.  ஒவ்வொருநாளும் படிக்கவேண்டிய அன்னையின் வரலாறுகளையும் சுலோகங்களையும் வழிபாட்டுமுறைகளையும் அறிந்து கொண்டாடினால் நமது துன்பங்கள் அகலும்.திருமணம் புத்ரபாக்யம் தம்பதிகள் ஒற்றுமை தீர்க்கசுமங்கலிபாக்யம் செல்வச்செழிப்பு ஆரோக்யமான ண்ட ஆயுள் இப்படி எல்லா வரங்களையும் வழங்கும்  நவராத்திரியை மகிழ்ச்சியோடு வரவேற்போம்.

முதல் நாள்:  ஸ்ரீதுர்க்கா தேவி

துர்க்கா என்ற சொல்லுக்கு அணுகமுடியாதவள் என்பது பொதுவான பொருள். அதாவது தீயசக்திகளாலும் உண்மை பக்தி இல்லாதவர்களாலும் அணுகமுடியாதவள் என்று அர்த்தம். அம்பிகையிடத்தில் உண்மை பக்தியும் நம்பிக்கையும் வைத்திருப்பவர்கள் எப்போது எந்தச்சூழலில் அழைத்தாலும் ஓடோடி வந்து காப்பாற்றுவாள். இதனால் யாரும் அணுகமுடியாதவள் என்று முன்பு சிந்திக்கப்பட்ட துர்க்கா இங்கு ஸதார்த்ர சித்தா என்று போற்றப்படுகிறாள்.

நூறு அஸ்வமேதயாகம் செய்தால் இந்திரனாகலாம்.அப்போது இருக்கும் இந்திரன் பதவியிழந்து விடுவான். நகுஷன் என்ற அரசன் நூறு அஸ்வமேதயாகம் செய்து இந்திரபதவி அடைந்து விடுகிறான். அதனால் அவனுக்கு ஆணவம் ஏற்படுகிறது.முன்பிருந்த இந்திரனை அவமானப்படுத்தி துன்புறுத்தவே அவனுக்கு பயந்து இந்திரன் ஓடிஔியும் சூழல் உருவாகிறது. இதனால் மேலும் ஆணவம் அதிகம் கொண்ட நகுஷன் மூவுலகையும் ஆட்டிப்படைத்துத் துன்புறுத்துகிறான். இந்திரனின் மனைவி சசிதேவியின் அழகில் மயங்கி அவளையடையப் பேராசைகொள்கிறான். இதனையறிந்த சசிதேவி ஸ்ரீதுர்க்காவிரதம் மேற்கொண்டு அம்பிகையிடம் தன்னைக் காப்பாற்ற இறைஞ்சுகிறாள். ஸ்ரீதுர்க்காதேவி தமது மாயாசக்தியால் நகுஷனின் மனதில் விபரீத எண்ணம் ஒன்றை தோற்றுவிக்கிறாள். அதன்படி எல்லோராலும் மதிக்கப்படும் சப்தரிஷிகளைப் பல்லக்கு தூக்குமாறு செய்து அதில்ஏறி சசியைக்காணப்புறப்படுகிறான். குள்ளமான அகஸ்தியரால் சரியாகத்தூக்கமுடியாமல் தடுமாறுவதைக்கண்ட நகுஷன் அகஸ்தியரைப்பார்த்து ஸர்ப்ப ஸர்ப்ப என்றுகூறி காலால் உதைத்துப் பெரும்பாவம் செய்கிறான். ஸர்ப்ப என்றால் வேகமாகச்செல்ல வேண்டியதையும் குறிக்கும். பாம்பையும் குறிக்கும். அவனது அடாதசெயலால் வெகுண்ட அகஸ்தியமுனிவர் நகுஷனைப்பார்த்து ஸர்ப்ப ஸர்ப்ப என்று திருப்பிச் சொன்னார். அதுவே அவனுக்குச்சாபமாகியது. நகுஷன் பாம்பாக மாறி கீழேவிழ சசிதேவி ஸ்ரீதுர்க்கையின் கருணையை எண்ணி மகிழ்ச்சியுடன் வணங்குகிறாள். மூவுலகும் அன்னையைப்போற்றியது. மீண்டும் இந்திரன் பதவிபெற்று உலகுக்கு நன்மை செய்கிறான்.

துர்க்காதேவி அருள்பெற சொல்லவேண்டிய மந்திரம்:


துர்க்கேஸ்ம்ருதா ஹரஸி  பீதிம் அசேஷ ஜந்தோ:
ந ஸ்வஸ்தைஸ்ம்ருதாமதிமதீவ சுபம் ததாஸிந தாரித்ரய
துக்கவிநாசினி காத்வதன்யாந ஸர்வோபகார
கரணாய ஸதார்த்ர சித்தாநந

பூஜைமுறை: தாம்பாளத்தில் எட்டுஇதழ் தாமரை மாக்கோலமிட்டு பூக்களால் அலங்கரித்து அதன் நடுவே குத்துவிளக்கேற்றிவைத்து மேற்கூறிய சுலோகத்தைச்சொல்லி தீபத்திற்கு சாத்தி ஓம் ஸ்ரீ துர்க்காதேவ்யை நம: என்று பூஜிக்கவும். பால்பாயஸம் கொத்துக்கடலை சுண்டல் இயன்ற பழங்கள் வெற்றிலைபாக்கு முதலியன வைத்து வேதனம் செய்து அபிராமி அந்தாதிப்பாடல்களையும் இன்னும் தெரிந்த அம்மன் பாடல்களையும் பாடி தீபாராதனைக்காட்டி பூஜையைமுடிக்கவும். பிறகு எல்லோருக்கும் குங்குமம் மற்றும் வேதனப் பிரசாதங்கள் வழங்கவும். சுமங்கலிகளுக்கு சிவப்பு ரவிக்கைத்துணியுடன் மங்களப்பொருட்கள் வைத்துக்கொடுத்து அவர்களை துர்க்கையாக எண்ணி வழிபடவும். றைவாக தீபத்துக்கு ஆரத்திவிட்டு பூஜையறையில் சேர்த்துவிடவும். பூஜைநேரம் மாலை 5.0 மணிமுதல் இரவு 7.0 மணிவரை.    

இரண்டாம் நாள்: சங்கரிதேவி

சங்கரி என்ற சொல்லுக்கு மங்களத்தைச் செய்பவள் என்று பொருள்.அதாவது குழந்தைகள் தவறு செய்தாலும் அவர்களுக்கு நல்லதையே செய்யும் தாயைவிட மேலானவள் அம்பிகை. நாம் மங்களம் என எவற்றை க்குறிப்பிடுகிறோமோ அவற்றிற்கும் மங்களத்தை அளிப்பவள் அவள்தான். இதைத்தான் ஸர்வ மங்கள மாங்கல்யே எனும் சுலோகம் குறிப்பிடுகிறது. படிப்பு செல்வம் புகழ் என எல்லாம் இருந்தாலும் மகிழ்ச்சி என்பது இணைந்தால்தான் மங்களகரமான வாழ்வு என்பது றைவாக இருக்கும். இதற்குத் தடையாக இருப்பவை துன்பம் தடை இன்னல் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களாகும். இவை கிரக சஞ்சாரத்தினாலும் முன்வினைப்பயனாலுமே ஏற்படுகின்றன. இவற்றைத்தடுத்து மகிழ்ச்சியை மட்டுமே அடையும் ஆற்றல் தேவர்களாகட்டும் மனிதர்களாகட்டும் யாருக்கும் கிடையாது. அம்பிகையைச் சரணடைவோர்க்கே வாழ்க்கை இன்பம் என்பது கிட்டும். இதற்காக அம்பிகையை வழிபட எவ்வளவோ சிறப்பான நாட்கள் இருந்தாலும் எல்லாவற்றையும் விட மேலானது நவராத்திரி வழிபாடேயாகும். யாராலும் தீர்க்க முடியாத கஷ்டங்கள் நோய்நொடிகள் என எல்லா துன்பங்களையும் போக்கி அன்னையின் அருளால் னைத்த வரங்களைப் பெற்று இன்பமாய் வாழலாம்.

ஸுரதன் என்ற ஒரு அரசன் இருந்தான். இப்பூவலகம் முழுவதையும் தி வழுவாமல் அரசாண்டு வந்தான். அவனது வளர்ச்சியைக்கண்டு பொறாத கோலாவித்வம்ஸினர்கள் என்ற எதிகள் அவனை சூழ்ச்சியால் வென்றார்கள். ராஜ்ஜியம் இழந்த அவ்வரசனின் அரண்மனை மற்றும் இதர உடமைகளையும் அவனது சுற்றத்தார்களும் மந்திரிகளும் எடுத்துக்கொண்டு அவனை ஏமாற்றி விடுகிறார்கள். இதனால் மனமுடைந்த ஸுரதன் காட்டுக்குச் செல்கிறான். தனிமையான இடத்தில் இருந்து நடந்ததை எண்ணி எண்ணி மனம் சோர்ந்து கொண்டிருந்தான். அப்போது அங்கு மற்றும் ஒருவர் தன்னைப்போலவே சோர்வுடன் இருப்பதைக்காண்கிறான். யார் என வினவுகிறான். அவரும் தம்் பெயர் ஸமாதி என்றும் மிகப்பெரிய வணிகர் குலத்தில் பிறந்த செல்வந்தர் என்றும் கூறுகிறார். காட்டிற்கு வந்த காரணத்தை வினவ மனைவி மக்களே தம்மை ஏமாற்றி செல்வத்தைப் பிடுங்கிக் கொண்டதாகவும் அதனால் வாழ்க்கையை வெறுத்து காட்டிற்கு வந்ததாகவும் கூறுகிறார். இருவேறுபட்ட கஷ்டங்களினால் பாதிக்கப்பட்ட இருவரும் தங்களின் விடிமோட்சம் அறிய அங்கு தவம் செய்து கொண்டிருந்த ஸுமேதஸ் என்ற முனிவரை அணுகி தங்களது கதைகளைக்கூறி துன்பம் ங்க வழிகாட்டியருளுமாறு வினவுகின்றனர். முனிவரும் அவர்கள் மீது கருணைகொண்டு அன்னையைச்சரணடைந்தால் உங்கள் துன்பங்கள் அகலும் எனக்கூறுகிறார். அரசாட்சியிலும் வியாபாரத்திலுமேயே காலம் செலுத்தி வந்த அவ்விருவரும் அம்பிகையைப்பற்றி அறிந்திருக்கவில்லை. எனவே அவர்கள் முனிவரிடம் அம்பிகை என்றால் யார்;அவளின் மகிமைகள் என்ன? என வினவுகின்றனர்.

முனிவரும் அன்னையின் அற்புத வரலாறுகளைச் சொல்கிறார். மதுகைடபன் மகிஷாஸுரன் சும்பன் சும்பன் போன்ற அரக்கர்களை அழிப்பதற்காக காளி துர்க்கை போன்ற அவதாரங்கள் எடுத்து அசுரர்களை அழித்து மூவுலகையும் காப்பாற்றிய புராணங்களை அருளுகிறார். இவற்றையெல்லாம் கேட்ட அரசனும் வணிகரும் அந்த அம்பிகையை வழிபட்டு நாங்களும் அருள்பெற வழிகூறுமாறு வேண்டுகின்றனர். நவராத்திரி தினங்களில் அன்னையின் வரலாறுகளைப் படித்தும் கேட்டும் கொலுவழிபாடு செய்தும் அம்பிகைக்குப் பிரியமான ஸ்ரீசண்டீஹோமம் செய்தும் வழிபட்டால் ங்கள் இழந்த வாழ்க்கையை மீண்டும் பெறலாம் எனக் கூறுகிறார். இருவரும் அவ்வாறே செய்ய யாககுண்டத்திலிருந்து ஸ்ரீசங்கரிதேவி தோன்றி என்ன வரம்வேண்டும் எனக் கேட்கிறாள். அரசன் இழந்த ராஜ்ஜியத்தை மீண்டும் வேண்டுகிறான். உனது பக்தியிலும் வழிபாட்டிலும் மிக்கமகிழ்ச்சியடைந்துள்ளேன். இதற்கு வரமாக இப்பிறவியில் பூமண்டல சக்கரவர்த்தியாக ஆண்டும் அடுத்த பிறவியில் ஸூரியனுக்கு மகனாகப்பிறந்து 71 சதுர்யுகங்கள் கொண்ட ஒருமன்வந்திரம் முழுதும் உன்பெயரால் உலகை ஆள்வாயாக என்று வரமருளினாள். தற்போது நடப்பது வைவஸ்வத மன்வந்திரம். அடுத்து வரப்போகும் ஸாவர்ணிக மன்வந்திரமாக ஸுரதன் விளங்கப்போகிறான். வணிகர் தமக்கு வாழ்க்கை இனி வேண்டாம். உன்னையே வணங்கி தவமிருந்து கண்டு தரிசிக்கும் வரம் வேண்டும் என்கிறார். அப்படியே ஆகட்டும் என அன்னை சங்கரிதேவி வரமளித்த வரலாறு மார்க்கண்டேய புராணம் எனும் நூலில் கூறிய வண்ணம் நாமும் சிந்தித்தால் சாதிக்கமுடியாதது எதுவும் இல்லை எனும் மனோபலத்துடன் வெற்றியுடன் வாழலாம்.

சங்கரி தேவி அருள்பெற சொல்லவேண்டிய மந்திரம்;
ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதகேந
சரண்யே த்ரயம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதேநந

பூஜைசெய்யும் முறை:  தட்டத்தில் அறுகோணக்கோலம் வரைந்து நடுவிலும் ஆறுகோணங்களிலுமாக ஏழுதீபங்கள் ஏற்றி வைத்து ஓம் ஸ்ரீ சங்கரிதேவ்யை நமஹ என்று அர்ச்சனை செய்யவும். பாசிப்பருப்புப்பாயசம் காராமணிசுண்டல் வேதனம் செய்து தெரிந்த பாடல்களைப்பாடி  சுமங்கலிகளுக்கு மஞ்சள்ற ரவிக்கைத்துண்டு மற்றும் மங்களப்பொருட்கள் வழங்கி ஆரத்தி எடுத்து முன்போல் நிறைவு செய்யவும்

மூன்றாம் நாள்: மஹிஷாஸுரமர்த்தினி

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது மனம்மதியும் மகிழ்ச்சியும். இவையில்லாமல் வேறு எவ்வளவு சிறப்புகள் நம்மிடம் இருந்தாலும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடையாது. ம்மதி மகிழ்ச்சி ஆகியவற்றைத் தருவது எது எனக்கேட்டால் மனித அறிவுதான் என்கின்றன சாத்திரங்கள். புலன்கள் அறிவிப்பதையெல்லாம் மனம் ஆசைப்படுகிறது. அப்படி ஆசைப்படும் மனதிற்கு நல்லது கெட்டது எனும் வேறுபாட்டை உணர்த்தி நல்வழியில் போகச்செய்வது அறிவு. இது மிகவும் கடினமான காரியம். இதைச்செய்ய அறிவுக்கு றைய ஆற்றல் வேண்டும். அந்த ஆற்றலை இறைவனால் மட்டுமே வழங்கமுடியும். என் அறிவு மங்கும்போதெல்லாம், மனதை நல்வழிப்பாதைக்கு இட்டுச்செல்லும் ஆற்றலைத்தந்து அறிவைத்தூண்ட வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திப்பதே காயத்ரீமந்திரத்தின் உட்பொருளாகும். மனம் ஆசைப்படுவதையெல்லாம் அனுபவிக்க விரும்பினால் மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். தவறான ஆசைகளினால் தீயவழிகளுக்குச் செல்பவர்களும் அவர்களால் பாதிக்கப்படுபவர்களும் மகிழ்ச்சியையும் ம்மதியையும் இழந்து வாடிற்பதைக்காணலாம். அறிவுக்குக்கட்டுப்படாமல் மனம்போனபோக்கில் நல்லது கெட்டது வேறுபாடு இல்லாமல் செயல்படுபவர்களை எருமை என்று குறிப்படுவதற்குக்காரணமும் இதுதான். மிருகங்களிலும் கீழ்மையான பழக்கங்களையுடையது மகிஷம் எனும் எருமை. ஸ்ரீஅம்பிகையின் வரலாற்றில் மஹிஷாஸுர வதம் என்பது அறியாமையால்  தவறுகள் செய்யும் மனிதர்களின் மனதைத்தூய்மைப்படுத்தி நல்லறிவைத்தந்து நன்னெறிப்பட்ட  வாழ்க்கையை அன்னை அருளுகிறாள் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

ரம்பாஸுரன் என்பவன் அம்பிகையை நோக்கிக் கடும் தவம் இருந்தான். அவன்முன் தோன்றிய அன்னை என்னவரம் வேண்டும் எனக்கேட்டாள். உனக்கு வாகனமாக இருக்குமாறு எனக்கு ஒருமகன் பிறக்கவேண்டும் என வேண்டினான். அவ்வாறே ஆகட்டும் என அருளினாள்.சிலகாலம் கழித்து அவனுக்கு விசித்ரமான தோற்றத்தில் குழந்தை பிறக்கிறது. எருமைத்தலையும் அரக்க வடிவமும் கொண்டு பிறந்த அக்குழந்தையைக்கண்டு மனம் வருந்திய ரம்பாஸுரனுக்கு முற்பிறவியில் செய்த பாவத்தின் காரணமாய் தமோகுண கீழ்மையான குணம்வடிவமாக இவன் பிறந்துள்ளான். காலம் வரும்போது இவனது அரக்ககுணத்தையும் தமோகுணத்தையும் அழித்து நாம் அவன் தலையில் ன்று அருள்புரிவோம் என அம்பிகை அசரீரியாகக் கூறுகிறாள்.

காலம் செல்கிறது. மஹிஷன் அரசனாகிறான். தேவர்களை வென்று மூவுலகத்தையும் ஆட்சி செய்கிறான். எல்லோரையும் துன்புறுத்தி இன்புறுகிறான். யாரும் அவனை வெல்லமுடியவில்லை. நாளுக்கு நாள் அவனது தீயசெயல்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தேவர்கள் பிரமனிடம் முறையிடுகிறார்கள்.பிரமனும் விஷ்ணுவும் தேவர்களுமாக எல்லோரும் சேர்ந்து சிவனிடம் முறையிடுகிறார்கள். மஹிஷனை அழிக்க உபாயம் தேடி ஆலோசிக்கும்போது எல்லா தேவர்களின் உடலிலிருந்தும் ஔி வெளிப்பட்டு ஒன்றுசேர்ந்து ஒருபெண்ணாக மாறுகிறது. பதினெட்டு கரங்களும் அவற்றில் ஆயுதமும் கொண்டு மஹிஷாஸுரனை அழித்து மூவுலகையும் காப்பாற்றுவதாகக்கூறி போருக்குப் புறப்படுகிறாள். மஹிஷனின் அறிவை ஆணவம் மறைத்திருந்ததால் வந்திருப்பது ஜகன்மாதா என்று அறியாமல் கடுமையாகப்போர் புரிகிறான். அவனது தலையை வெட்டும்போதெல்லாம் வேறு தலை முளைத்து மீண்டும் போரிடுகிறான். கடைசியாக துர்க்காதேவி ஒருகையினால் சூலாயுதம் கொண்டு அவன் உடலைப்பிளந்தும் மற்றொருகையினால் வாள்கொண்டு அவனது தலையைச்சீவியும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் சமயம் அம்பிகையின் கரம் பட்டதாலும் உடலிலிருந்த கெட்ட ரத்தம் வெளியேறியதாலும் தமோகுணமும் அசுரகுணமும் அழிந்து தனது தந்தையின் வரத்தை தமக்கு அருளுமாறு அன்னையை வேண்ட ஸ்ரீமஹிஷாஸுரமர்த்தினியாக பதினெட்டுகரங்களுடன் சாந்தரூபம் கொண்டு ஸ்ரீமஹாலட்சுமி துர்க்கையாக மஹிஷனின் தலையில் ன்று அருள்புரிய தேவர்கள் பூமாரிப்பொழிந்து ஜயஜய எனும் வெற்றி கோஷம் எழுப்பி வழிபட்டனர். இன்று ஸ்ரீமஹிஷாஸுரமர்த்தினியை வழிபட்டு நம்மிடம் உள்ள அறியாமை மற்றும் தீயசிந்தனைகளை அகற்றி நல்லறிவு பெற்றும் எதிரிகள் தொல்லை கண்திருஷ்டி தோஷங்கள் ங்கி மகிழ்ச்சியான வாழ்க்கையையும் பெறுவோமாக.

ஸ்ரீமஹிஷாஸுரமர்த்தினி ஸ்தோத்திரம் பாராயணம் செய்து அருள் பெறுவோம்.

பூஜிக்கவேண்டிய முறை: தட்டத்தில் எட்டிதழ் தாமரைக்கோலமிட்டு நடுவிலும் இதழ்களிலுமாக ஒன்பது தீபங்கள் ஏற்றிவைத்து ஓம் ஸ்ரீ மஹிஷாஸுரமர்த்தின்யை நமஹ என்று அர்ச்சனை செய்யவும். கற்கண்டுப்பொங்கலும் மொச்சைக்கடலை சுண்டலும் வேதனம் செய்து வியோகிக்கவும். சுமங்கலிகளுக்கு பச்சைற ரவிக்கைத்துண்டு மற்றும் மங்களப்பொருட்கள் வழங்கவும். ஆரத்தி எடுத்து பூஜையை முடிக்கவும்.

நான்காம்நாள்:  மஹாகௌரீ

கௌரம் என்ற சொல்லுக்கு வெண்மைறம் என்றுபொருள். அம்பிகை இயல்பாக பச்சைறத்தவளானதால் சியாமளா என்றே பெயர் பெற்றிருக்கிறாள். வெண்மையுடன் கரியறத்தைக் கலந்தால் பச்சைறமாக மாறும். கரியறம் காளியினுடையது. வெண்மை உமையம்மையினுடையது. இரண்டு சக்திகளும் இணைந்த வடிவமே ஜகன்மாதாவின் பச்சைறம். நாராயணின் சகோதரியும் அவர் றமாகத்தானே இருப்பாள்!
 
சும்பன் சும்பன் எனும் இரு கொடிய அரக்கசகோதரர்கள் தோன்றி மகிஷனைப்போலவே மூவுலகையும் வென்று எல்லோரையும் துன்பப்படுத்தி கொடுமையான அசுர ஆட்சி புரிகின்றனர். அவர்களை அழித்து மூவுலகையும் காக்க எண்ணிய தேவி அதற்கான சக்திபெற சிவபெருமானை நோக்கி விரதம் இருந்த நாட்களே நவராத்திரி நாட்களாகும்.உலகைக்காக்க விரதம் இருந்த அன்னைக்கு சர்வவல்லமையையும் அளித்தார் சிவன்.

 இதேசமயம் சும்பசும்பர்களின் கொடுமை தாங்காத தேவர்கள் ஒன்றுகூட இமயமலையில் உள்ள மானஸஸரோவரம் எனும் புணித ர்க்கரையில் அம்பிகையைக்குறித்து வழிபாடுகளம் யாகங்களும் கழ்த்தினர். அவர்களது பக்தியை மெச்சிய தேவி தேவர்கள்முன் பிரசன்னமாகி என்னவேண்டும்; எதற்காக இந்தவழிபாடு ? என வினவுகிறாள்.அப்போது  பச்சைறத்தவளான உமாதேவியின் உடலிலிருந்து வெண்மை றமான ஸ்ரீமகாகௌரீ எனும் சக்தியானவள் வெளிப்பட்டு, சும்ப சும்பர்களை அழிக்கவேண்டி தேவர்களால் என்னைக்குறித்து செய்யப்பட்ட யாகம் இது எனக்கூறுகிறாள். வெண்மை றத்தவளாய் சிகப்புப்பட்டாடை உடுத்தி சகல ஆபரணங்களும் தரித்து மங்களத்திலகமும் பூக்கள் அலங்கரித்த கருங்கூந்தலுமாக வர்ணனைக்கு எட்டாத அழகும் ஔியும் பொருந்திய ஸ்ரீமகாகௌரியானவள் தேவர்களைப்பார்த்து இனி கவலைவேண்டாம். அரக்கர்களை அழித்து மூவுலகிற்கும் அருள்புரிவோம் என வரமளிக்கிறாள். தேவர்கள் ஆனந்தப்பட்டு அப்போதே ஜயஜய கோஷம் எழுப்புகின்றனர். வெண்மை றம் வெளிப்பட்டதால் உமையவளின் தோற்றம் கரியறத்தில் மாறி அசுரகுலத்தை அழிக்கும் காளியாக உருவெடுத்தது.

இப்படி இங்கு கழ்ந்து கொண்டிருக்க அரக்கர்களைச் சேர்ந்த சண்டன் முண்டன் எனும் இருவர் ஸ்ரீமஹா கௌரியின் அற்புத அழகைக்கண்டு வியந்து அவளை சாதாரணப்பெண்ணாக எண்ணி இவளே நம் அரசர்களுக்கு மனைவியாகத்தகுதியுடையவள் என்று முடிவெடுத்து சும்பசும்பர்களின் இருப்பிடம் சென்று கீழ் வருமாறு கூறுகின்றனர்.

ஐந்தாம் நாள்:  ஸ்ரீபவானி

முன்னொரு காலத்தில் ரித்வாக் என ஒருமுனிவர் இருந்தார். அவருக்கு ஒரு மகன் ரேவதி நட்சத்திரத்தில்  பிறந்தான்.அவன் வளர வளர அவனது செயல்பாடுகள் தீயவையாகவே இருப்பதைக்கண்டு முனிவர் வருந்தினார். வேதங்களைக்கற்பிக்க முயற்சித்தார். அதில் இஷ்டப்படாமல் கூடாநட்புகளுடன் பொழுதைப்போக்கினான். இளைஞனாக வளர்ந்த அவன் மதுமாது என அடாத செயல்களைச் செய்யத்துவங்கினான். அதைக்கண்டுமனம் பொறாத முனிவர் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த தனது மகன் தடம்புரண்டு விட்டதால் நட்சத்திரத்தின் மீது கோபம் கொண்டு நட்சத்திர மண்டலத்திலிருந்து பூமியில் விழுமாறு சபித்து விட்டார். முனிவரின் சாபத்தால் பூமியில் குமுதமலையில் விழுந்தது ரேவதி நட்சத்திரம். அம்மலையிலிருந்து ஔியும் அழகும் ரம்பிய ஒரு பெண் தோன்றினாள்.
 
அங்கு தவம் செய்து கொண்டிருந்த ப்ரமுகமுனிவர் ரேவதிநட்சத்திரத்தின் ஔியினால் அழகிய பெண் தோன்றியிருப்பதை ஞானக்கண்ணால் அறிந்து அவளுக்கு ரேவதி எனப்பெயரிட்டு தமதுமகளாக வளர்த்தார். அவளது அழகுக்கும் தேஜஸ்ஸுக்கும் தகுந்த மணமகன் கிடைக்கவேண்டுமே என்று கவலை கொண்டு தினமும் யாகம் செய்து தமது வளர்ப்பு மகளுக்கு ஏற்ற வரனை அருளுமாறு வேண்டினார்.

ஒருநாள் அக்னிதேவன் அம்முனிவருக்குக்காட்சியளித்து உமது மகளுக்கு ஏற்ற மணமகன் விந்திய மலையை ஆண்டுவரும் விக்கிரமசீலன் என்ற மன்னனுக்கும் காளிந்தீ என்ற அரசிக்கும் பிறந்த துர்த்தமன் என்ற இளவரசனேயாவான். அவன் அழகிலும் வீரத்திலும் இணையற்றவன். பதினான்கு மன்வந்திரங்களில் முதலாவது மன்வந்திரமாகிய ஸ்வாயம்புவ மன்வந்திர மன்னனின் கொள்ளுப்  பேரனாவான். அரசிளங்குமரன் துர்த்தமனுக்கு உமது மகளைத்திருமணம் செய்து கொடு. காலம் வரும்போது அவனே இங்கு வருவான்  என அருளினார்.
     
சிலநாட்களில் இளவரசன் துர்த்தமன் வேட்டையாடச் சென்றவன் யதார்த்தமாக ப்ரமுகமுனிவர் ஆசிரமத்தையடைந்தான். முனிவர் யாகத்தில் இருந்தார். இளவரசனை ரேவதியே வரவேற்றாள். அவளது அழகு பண்பாடு இவற்றைக்கண்டு வியந்த துர்த்தமன் அவளை மனைவியாக அடைய விரும்பினான். யாகத்தில் இருந்த முனிவருக்கு இவையனைத்தையும் அக்னிதேவன் புலப்படுத்த மகிழ்ச்சியோடு யாகத்தை முடித்த முனிவர் இளவரசனை வரவேற்று மணமகனுக்கு செய்யவேண்டிய மரியாதைகளையும் செய்தார். இதனைக்கண்டு ஆச்சரியப்பட்ட இளவரசனுக்கு முனிவர் இது அக்னிதேவனின் அருள் என்று விளக்கினார். ரேவதிக்கும் துர்த்தமனுக்கும் திருமணம் செய்வது எனப் பெரியோர்களால் ச்சயிக்கப்பட்டது.

இச்சமயத்தில் ரேவதி தமது வளர்ப்புத்தந்தையிடம் தமது திருமணத்தை ரேவதி நட்சத்திரத்தில்வைக்குமாறு வேண்டினாள். அதோடு குமுத மலையில் விழுந்த ரேவதி நட்சத்திரத்தை மீண்டும் நட்சத்திர மண்டலத்தில் இணைக்க வேண்டும் எனவும் வரம் கேட்டாள். சகலமும் அறிந்த ப்ரமுகமுனிவர் தமது தவவலிமையாலும் அக்னிதேவனின் அருளாலும் ரேவதி நட்சத்திரத்திற்கு ரித்வாக் முனிவரால் ஏற்பட்ட சாபத்தைக்கி மீண்டும் நட்சத்திரமண்டலத்தில் இணையுமாறு செய்தார். ரேவதிக்கும் இளவரசன் துர்த்தமனுக்கும் திருமணம் இனிதே நடந்தது. தம்பதிகள் முனிவரை வணங்கி ஆசிபெறும்போது  ஸ்வாயம்புவ மன்வந்திரத்தின் மன்னன் பரம்பரையில் வந்த தமக்கு ஒரு மகன் பிறந்து அவனும் ஒரு மன்வந்திரத்தின் மன்னனாக விளங்க வேண்டும். அதற்கு வழிகூறுங்கள் என இளவரசன் துர்த்தமன்  வேண்டினான்.

முனிவரும் ஈரேழு உலகிற்கும் அன்னையாகிய ஸ்ரீபராசக்தி பவானி துர்க்கா லட்சுமி சரஸ்வதி என்ற பெயர்களில் அருளுபவள்.  பவானியை நவராத்திரி விரதம் இருந்து வழிபட்டால்  விரும்பும்மகனை வரமளிப்பாள் எனக்கூறினார். இந்த விஷயங்களையெல்லாம் அறிந்த ரித்வாக் முனிவரும் தமது மகனும் திருந்தி வேதங்களைக்கற்று முனிவர் வம்சத்தைக் காக்க வேண்டுமே என்று மனம் தளர கர்க்கமுனிவர் நவராத்திரி விரதம் இருந்து அன்னையை வழிபட்டால் உமது மகனும் தீயசெயல்களிலிருந்து விடுபட்டு ஞானியாவான் எனக்கூற எல்லோருமாக நவராத்திரி பூஜையைச் செய்தனர். அன்னை ஸ்ரீபவானி அவர்கள் முன் தோன்றி ரேவதிக்கும் துர்த்தமனுக்கும் ஒருமகன் பிறப்பான். அவன் பிற்காலத்தில் ஐந்தாவது மன்வந்தரமாகிய ரைவத மன்வந்திரம் என்ற பெயருடன் இவ்வுலகை ஆள்வான் என வரமருளினாள். ரித்வாக் முனிவரைப்பார்த்து இனி உமது மகன் எந்தத் தவறுகளும் செய்யமாட்டான். உம்மிடம் வேதங்களைக்கற்று மிகப் பெரிய ஞானியாவான் என வரமருளி மறைந்தாள். எல்லோரும் ஸ்ரீபவானியை ஆராதித்து மகிழ்ந்தனர்.  இவ்வரலாற்றைப்படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும்  இனிய திருமண வாழ்க்கை அமையும்.நல்ல புத்திர்களாகப் பிறப்பார்கள்.

பூஜை செய்யவேண்டிய முறை:  தாம்பாளத்தில் ஐஸ்வர்யக்கோலம் வரைந்து நடுவிலும் சுற்றிலுமாக ஒன்பது தீபங்கள் ஏற்றி வைத்து ஓம் ஸ்ரீ பவான்யை நமஹ என அர்ச்சனை செய்யவும்.

பவனித்வம் தாஸே மயிவிதர த்ருஷ்டிம் ஸகருணாந
இதிஸ்தோதும் வாஞ்சன் கதயதி பவானித்வமிதி ய ததைவ த்வம்
தஸ்மை திசஸி ஜ ஸாயுஜ்ய பதவீம்நமுகுந்தப்ரம்மேந்திர ஸ்புடமகுட ராஜிதபதாம்நந என்ற சுலோகம் சொல்லி புஷ்பம் சாத்தி பால் கொழுக்கட்டை கடலைப்பருப்பு சுண்டல் வேதனம் செய்யவும். சுமங்கலிகளுக்கு பச்சை ரவிக்கைத்துண்டு மற்றும் மங்களப் பொருட்கள் வழங்கி ஆரத்தி எடுத்து பூஜையை நிறைவு செய்யவும்.

ஆறாம்நாள்: மஹாலக்ஷ்மீ
 
ஸ்ரீமந்நாராயணரின் சக்தியாக இருப்பவள் மகாலட்சுமி. தமது மார்பில் வைத்துப் போற்றுகிறார் மகாவிஷ்ணு. அதுவே அவரது மார்பில் ஒரு மங்கள அடையாளமாக உள்ளதால் லக்ஷ்மீ எனப்போற்றப்படுகிறாள். லக்ஷ்ம எனறால் அடையாளம். பெண்பாற்சொல்லில் லக்ஷ்மீ என்ற சொல்லாகியது. அகில உலகங்களுக்கும் ஐஸ்வர்யங்களை வழங்கும் அம்பிகையாக ஸ்ரீமஹாலக்ஷ்மீ அருள்பாலிக்கிறாள்.

ஐஸ்வர்யம் என்றால் ஈஸ்வரனுடையது என்று பொருள். சுவாமியை சிவனாக விஷ்ணுவாக பெண்தெய்வ வடிவாக இப்படி ஏதாவது ஒரு நிலையில் வழிபட்டால்தான்  ஈஸ்வரனுடைய ஐஸ்வர்யம் அதாவது லக்ஷ்மீகடாட்சம் நமக்குக்கிடைக்கும். எங்கெல்லாம் தூய்மை, பக்தி, பிறருக்கு உதவும் கருணை, தெய்வ வழிபாடு இதுபோன்றவை இருக்கிறதோ அங்கெல்லாம் லட்சுமி வாசம் செய்கிறாள். அதாவது அங்கு செல்வவளம் ஆரோக்கியம் இல்லற சுபிட்சம் வம்சவிருத்தி போன்ற எல்லா மங்களங்களும் நிறைந்திருக்கும். சூரிய உதய அஸ்தமன காலத்தில் விளக்கேற்றி வழிபடாமல் தூங்குவது வசிப்பிடத்தைத் தூய்மை செய்யாமல் குப்பைக்கூளங்களாக வைத்திருப்பது நகம்கடிப்பது பெரியவர்களையும் மகான்களையும் அவமதிப்பது போன்ற செய்யக்கூடாத செயலகளைச் செய்யும் இடத்தை விட்டு லக்ஷ்மீ அகன்றுவிடுவாள். இதுபோன்ற சூழல்கள் ஏற்பட்டால் விஷ்ணுவாகவே இருந்தாலும் அம்பிகை அகன்றுவிடுவாள் என நீதிநூல் கூறுகிறது.

தேவலோகத்தை ஆளும் இந்திரன் சகல ஐஸ்வர்யங்களும் உடையவன். கேட்டதையெல்லாம் தரக்கூடிய கற்பகமரமும் காமதேனுவும் இன்னும்பிற செல்வங்களும் அவரிடம்தான் இருக்கும். ரம்பை ஊர்வசீ.மேனகை போன்ற தேவலோக அழகியர் அவரது சபையில் நாட்டியமாடும் பணி செய்வர். பிருஹஸ்பதி எனப்போற்றப்படும் மகாஞானியாகிய தேவகுரு அவரது ராஜகுருவாக இருந்து ஆலோசனை வழங்குவார். இல்லாதது என எதுவுமே இல்லாத அளவிற்கு சகலசௌபாக்கியங்களும் ஸ்ரீமஹாலக்ஷ்மீ கடாட்சத்தால் பெற்று  பெற்று தேவலோகத்தை ஆண்டு வந்த தேவேந்திரனுக்கும் போறாதகாலம் வந்தது.

ஒருசமயம் தமது சபையில் நடனமாடும் பேரழிகியாகிய ஊர்வசியுடன் பூந்தோட்டத்தில் சல்லாபம் செய்து மகிழ்ந்திருந்த இந்திரனைக்காண துர்வாச முனிவர் வந்தார். சிவப்ரசாதமாக ஒரு பாரிஜாதமாலையை இந்திரனுக்கு அளித்தார். காமக்களியாட்டத்தால் ஆணவம் பெருகி மதியிழந்திருந்த இந்திரன் முனிவரையும் மதிக்காமல் ப்ரசாதத்தையும் மதிக்காமல் அம்மாலையை தமது பட்டத்து யானையாகிய ஐராவதத்தின் மீது வீசினான். யானைமேல் அம்மாலை பட்டமாத்திரத்தில் இந்திரனின் சகல ஐஸ்வர்யங்களும் அவனை விட்டுவிலகி யானை வடிவிலேயே காட்டிற்கு ஓடிவிட்டது. துர்வாசமுனிவரும் அதிககோபம் கொண்டு ‘உனது ஆணவத்தால் இந்திர பதவியை இழப்பாயாக; உனது தலைநகராகிய அமராவதிப் பட்டிணம் இனி அரக்கர் வசமாகக் கடவது‘ என சபித்து வெளியேறிவிட்டார். செய்வதறியாது திகைத்த இந்திரன் தமது நகரம் திரும்பினான். முனிவரின் சாபம் பலித்திருந்தது. அங்கு தேவர்கள் யாருமே இல்லை. எங்கும் தீயசக்திகள். மங்களம் இல்லாத சத்தங்களும் சூழலுமாக மாறியிருந்தது. புத்தி தெளிந்த இந்திரன் தமது குருவாகிய தேவகுருவையடைந்து நடந்த விஷயங்களைக்கூறி அழுதான்.

தேவகுரு அவன்மீது இரக்கம் கொண்டு லக்ஷ்மீ வாசம் செய்ய விரும்பும் இடங்களையும் விரும்பாத இடங்களையும் விளக்கி சிவ அபராதமும் குரு அபராதமும் சேர்த்துச் செய்து நீ மகாபாவியாகி விட்டாய்; இதற்குப்பரிகாரம் கூறுவதே தவறு. இருப்பினும் நீ எமது சீடன் மட்டுமின்றி தேவலோக அரசனாகவும் இருக்கிறாய். லட்சம் முறை பஞ்சாட்சர மகாமந்திம் ஜபம் செய்து முதலில் உன்னைத்தூய்மையாக்கிக் கொண்டு வா. பிறகு யோசிப்போம் என்று அனுப்பிவிட்டார். இந்திரனும் கங்கையில் மூழ்கி குருநாதர் உபதேசித்த முறைப்படி பஞ்சாட்சரம் ஜபித்து குரு இருப்பிடம் மீண்டான்.  தேவகுருவும் தேவலோகம் சுபிட்சம் பெறவும் இந்திரனுக்கு லட்சுமியின் அருள் மீண்டும் கிட்டவும் ஸ்ரீஜகன்மாதாவாகிய லக்ஷ்மீபூஜையையும் நவராத்திரி விரதமகிமையையும் உபதேசித்தார்.

‘இந்திரனேந சகல உலகங்களையுமாளும் பராசக்தியே துர்க்கா லக்ஷ்மீ சரஸ்வதி எனும் பல பெயர்களிலும் உருவங்களிலும் தோன்றி படைத்தல் காத்தல் அழித்தல் எனும் முத்தொழில் புரியும் பிரமன் விஷ்ணு ருத்திரன் ஆகியோரின் சக்தியாகி அருளுகிறாள். தீய சக்திகளை அழிக்க துர்க்கையாகவும், வழிபடும் பக்தர்களுக்கு சகலசெல்வங்களையும் அருள லக்ஷ்மியாகவும், எல்லோருக்கும் நல்லறிவைத் தரும் சரஸ்வதியாகவும் இருப்பவள் அவளே. நவராத்திரி நாட்களில் விரதம் இருந்து மதுகைடபர் மஹிஷாஸுரன் போன்ற கொடிய அரக்கர்களை அழித்தும் தேவர்முதலிய மூவுலகத்தோருக்கும் இன்னருள்புரிந்தும் கல்வியறிவும் மெய்ஞானமூம் வழங்கியதால் நாமும் அந்த அன்னையை துர்க்கா லக்ஷ்மி சரஸ்வதியாக நவராத்திரி நாட்களில் விரதம் இருந்து வழிபடவேண்டும். அப்படி.வழிபட்டால் நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் அகலும். சாபத்தினாலும் பிறரது கோபத்தினாலும் மற்றும் பிறரால் ஏமாற்றப்பட்டும் இழந்த செல்வங்களை மீண்டும் பெறலாம். புத்தித்தடுமாற்றம் ஏற்பட்டு சுயநினைவிழத்தல் ஞாபக மறதி படிப்பு வராமை போன்றவை அகன்று நல்லறிவும் ஸத்புத்தியும் ஏற்படும். எனவே நீ அந்த பராசக்தியை நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும் இரண்டாவது மூன்று நாட்கள் லக்ஷ்மியாகவும் கடைசி மூன்றுநாட்கள் சரஸ்வதியாகவும் வழிபடுவாயாக. உனக்கு துர்வாசமுனிவரால் ஏற்பட்ட சாபம் நீங்கும். மீண்டும் இந்திலோகம் ஜொலிக்கும். இழந்த ஐஸ்வர்யங்கள் உன்னை வந்தடையும்‘ எனக்கூறி மஹாலக்ஷ்மி வழிபாட்டு முறைகளையும் உபதேசித்தார். இந்திரனும் அவ்வாறே விரதம் இருந்து நவராத்திரி வழிபாடு செய்தான். அம்பிகையின் அருளால் துர்வாசமுனிவரே வந்து சாபம் நீக்கியருளினார். அமராவதிப்பட்டிணத்திலிருந்தும் அரக்கர்கள் வெளியேறி பாதாளலோகம் சென்றனர். இந்திரலோகம் மீண்டும் புத்தொளி பெற்றது. ஸ்ரீமஹாலக்ஷ்மி தனது கடைக்கண்ணோக்கினால் சகல ஐஸ்வர்யங்களையும் இந்திரனுக்கு வழங்கினாள். சிவ அபராதம் குரு அபராதம் நீங்கப்பெற்று ஆணவம் முதலியன நீங்கி இந்திரனும் மகிழ்ச்சியுடன் தேவலோகத்தை ஆளத்துவங்கினான்.

இவ்வரலாற்றைக்கேட்பவர்களும் படிப்பவர்களும் சகலசெல்வங்களும் பெறுவர். கடன் தொல்லை வறுமை நீங்கப்பெறுவர். பிறரிடம் ஏமாந்த பணம் மீண்டும் கைக்கு வந்து சேரும்.

பூஜைசெய்யும் முறை: தட்டத்தில் நடுவில் அறுகோணமும் சுற்றிலும் பதினாறு இதழ்தாமரையுமாகக் கோலமிட்டு அலங்கரித்து நடுவில் குத்து விளக்கேற்றியும் அறுகோணத்திலும் பதினாறு இதழ்களிலும் அகல்விளக்குகள் ஏற்றியும் ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்ம்யை நமஹ என்று அர்ச்சனை செய்யவும். லக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ரராஜ தநயாம் ஸ்ரீரங்கதாமேஸ்வரீம்ந தாஸீபூத ஸமஸ்தலோகவனிதாம் லோகைக தீபாங்குராம்ந ஸ்ரீமன் மந்தகடாக்ஷ லப்தவிபவ ப்ரம்மேந்த்ர கங்காதராம்ந த்வாம் த்ரைலோக்ய குடும்பினீம் ஸரஸிஜாம் வந்தே முகுந்தப்ரியாம்நந -  என்ற சுலோகம் சொல்லி புஷ்பம் சாத்தி பால் அன்னம் பாசிப்பருப்பு சுண்டல் நிவேதனம் செய்து தீபாராதனை செய்து தெரிந்த பாடல்களைப்பாடி சுமங்கலிகளுக்கு சிகப்பு ரவிக்கைத்துண்டு மங்களப்பொருட்கள் வழங்கி அம்பாளுக்கு ஆரத்தி எடுத்து பூஜையை நிறைவு செய்யவும்.

ஏழாம் நாள்: பார்வதி

மனிதவாழ்வில் திருமணம் என்பது ஒரு முக்கியமான நிகழ்வு என்பதையும் கடந்து இல்லறம் என்ற சொல்லினால் தர்மத்தைக்குறிக்கிறது. மனைவியை தர்மபத்னீ என்று சொல்வதையும் காணவேண்டும். தானதர்மங்களை வைதிக நெறிப்படி செய்வதற்கு அங்கீகாரம் வழங்குவதே திருமணத்தின் நோக்கமாகும். இது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்றும் கூறுவர். இன்னாருக்கு இன்னார்தான் மனைவி இன்னார்தான் கணவன் என்பது இறையருளால் அமைவதையே இது குறிப்பிடுகிறது. சிலருக்கு விரும்பியபடி வாழ்க்கைத்துணை கிடைக்கிறது. சிலருக்கு யதார்த்தமாகவே நல்லவாழ்க்கை அமைகிறது. சிலர் தாமாகவே துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதும் நிகழ்வதைக்காணமுடிகிறது. இப்படி எத்தனையோ விதமாக முடிவாகும் திருமணங்கள் நடைமுறை வாழ்க்கையில் வெற்றிபெறுவதையே வாழ்நாள் வெற்றி என அபிராமிபட்டர் குறிப்பிடுகிறார்.ஏதோ விதிவசத்தாலும் பரஸ்பரம் புரிந்துணர்வு இல்லாமையாலும் ஒருசிலரின் வாழ்க்கை தோல்வியடைகிறதே தவிர பரம்பரைக்கலாசாரத்தைக்காக்கவேண்டியும் கிடைத்தவாழ்க்கையை இன்பமானதாக மாற்றிக் கொள்ளவும் தம்பதிகளாகக் கோயிலுக்குச் சென்று வழிபடும் நெறியை நம் இந்துமதம் வகுத்துள்ளது ஒரு அற்புதம் எனலாம். விரும்பத்தகாத அல்லது பொருத்தமில்லாத கணவனோ அல்லது மனைவியோ பெரியவர்களின் வற்புறுத்தலாலோ வாக்குக்கொடுத்ததாலோ அல்லது சூழலினாலோ வாழ்க்கைத்துணையாக அமையும்போது இக்காலத்து இளைஞர்களும் பெண்களும் செய்வதறியாது சோர்ந்து விடுகின்றனர். சிலர் கலாசாரத்தை மீறி பிரிந்தும் விடுகின்றனர். தெய்வத்தின் திருவருளால் எதையும் நமக்கு இன்பமானதாக மாற்றிக் கொள்ளும் ஆற்றல் நம்மிடம் உள்ளது என்பதையும் நமது புராணங்கள் அதற்கு வழிகாட்டுகின்றன என்பதையும் சிறுவயதுமுதலே பயிற்றுவிக்காததால்தான் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டு மணம்நடந்தும்  வாழத்தெரியாமல் சிலர் துன்பமேவாழ்க்கையாக வாழ்கின்றனர்.

சர்யாதா என்று ஒரு அரசன் இருந்தான். அவனுக்கு அறிவிலும் அழகிலும் சிறந்த சுகன்யா என்று ஒரு பெண்ணிருந்தாள். அவள் இளம்வயது முதலே பண்பாட்டுடன் வளர்க்கப்பட்டதாலும் இயல்பாகவே இனிய சுபாவமுடையவள் ஆகையாலும் எல்லோராலும் வணங்கப்படும் அரசிளங்குமரியாக விளங்கினாள். ஒருசமயம் தமது தோழிகளுடன் காட்டிற்கு விளையாடச் சென்றாள். அங்கு பெரிய கரையான் புற்று ஒன்று இருந்தது. அதைச்சுற்றி விளையாடிக்கொண்டிருந்த போது புற்றின்மீது சுகன்யாவின் கவனம் சென்றது. அதை உற்று நோக்கினாள். அதில் இரு துவாரங்கள் இருப்பதையும் அதன் வழி உள்ளே ஏதோ பளிச்சிடுவதையும் கண்ட அரசிளங்குமரி ஒருகுச்சியை எடுத்து அத்துவாரத்தில் குத்தி விட்டாள். ஒன்றும் தெரியாததால் மறுதுவாரத்திலும் அவ்வாறே குத்தி விட்டாள். அப்போதும் ஒன்றும் தெரியவில்லை. அதைவிட்டு விளையாட்டையும் முடித்து அரண்மனை திரும்பினார்கள். அங்கு ஒரே கூட்டமாக இருந்தது. எங்கும் வலிபொறுக்காத வேதனை சத்தங்கள் கேட்டன. தோழிகளோடு அருகில் சென்று விசாரித்தபோது சிலமணிநேரங்களாக எல்லோரும் சிறுநீர் கழிக்கமுடியாமல் அவஸ்தைக்குள்ளாகியிருப்பதாக அறிந்தனர். உள்ளே சென்று பார்த்தால் மன்னன் உட்பட எல்லோருக்குமே அந்த வேதனை ஏற்பட்டிருப்பதை அறிந்தனர். அரண்மனை வைத்தியர்களும் கூட ஏதும் புரியாது கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர்.
    
அந்தராஜ்ஜியத்தின் ராஜகுரு வரவழைக்கப்பட்டார். காரணத்தையறிந்து தக்க பரிகாரத்தை உடன் செய்யுமாறு மன்னன் வேண்டினான். தவவலிமை மிக்க ராஜகுரு கண்மூடி தியானித்து ஞானக்கண்ணினால் நடந்தவற்றை அறிந்தார். காட்டில் பலஆண்டுகளாகத் தவம் செய்துவரும் சியவனமுனிவர் தெரிந்தார். அவரைச்சுற்றி கரையான் புற்றிருப்பதையும் அறியாமல் யாரோ செய்த தவறினால் அவரது கண்கள் குருடாகிவிட்டதையும் அறிந்தார். தவமே வாழ்க்கையாகக் கொண்ட முனிவரின் கண்கள் குருடாக்கப்பட்டதே அந்நாட்டு மக்களின் வேதனைக்குக்காரணம் என்பதையும் அறிந்து அவரிடமே பரிகாரம் கேட்கலாம் என மன்னனும் ராஜகுருவும் மற்றோரும் கிளம்ப சுகன்யாவும் தோழிகளுடன் புறப்பட்டாள்.

எல்லோரும் காட்டிற்குச்சென்றனர். புற்றிருந்த இடத்தைத்தேடி அடைந்தனர். அங்கு சென்றதும் சுகன்யா அதிர்ச்சியடைந்தாள். தாம் குச்சியால் குத்திய புற்றின் இரு இடங்களிலும் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. உடன் வந்தவர்கள் புற்றைக்கலைத்து முனிவரை மெதுவாகத்தூக்கி நிறுத்தினர். அவரது இருகண்களும் குருடாகியிருப்பதைக் கண்ட சர்யாதாமன்னன் கோபம் கொண்டு இத் தவறைச்செய்தவர் யார் என எல்லோரையும் பார்த்து வினவினான். பயந்து நடுங்கிய அரசிளங்குமரி தாமே அக்குற்றத்தை அறியாமல் செய்ததை எல்லோரும் அறிய ஒப்புக்கொண்டாள். மன்னனும் செய்வதறியாது முனிவரை நமஸ்கரித்து மக்களும் தாமும்படும் வேதனையைக்கூறி குற்றம்பொறுத்து எங்களின் சங்கடத்தைத் தீருங்கள் என்றும் அதற்குப் பரிகாரமாக எதைக்கேட்டாலும் வழங்குதாக மன்றாடினான். முனிவரும் கருணைகொண்டு  ‘எனக்கு யார்மீதும் கோபமில்லை. எல்லாம் விதிவசத்தால் நிகழ்வது. இனி எனக்குக் கண்தெரியாது. தவமும் கலைந்து விட்டது. எனக்கு உதவியாகவும் துணையாகவும் இருக்குமாறு ஒருவரைக் கொடு போதும்‘ என்றார். யாரை அனுப்புவது என மன்னன் யோசிக்கும் வேளையில் சுகன்யா முன் வந்து நம்நாட்டு மக்களுக்கு துன்பம் ஏற்படக்காரணமாயிருந்த நானே இம்முனிவரை மணந்து நல்ல துணையாக இருக்கப்போகிறேன் எனக்கூறி முனிவரை நமஸ்கரித்து   மக்களின் வேதனைத்தீர தம்மை ஏற்குமாறு வேண்டினாள். முனிவரும் ஏற்க; மக்களின் சிறுநீர்கழிக்கமுடியாத வேதனை உடனே நீங்கியது. மன்னனும் மக்களும் கலங்கினர். அழகில் ரதியையும் அறிவில் சரஸ்வதியையும் நிகராகக்கொண்ட தங்களின் அரசிளங்குமரி ஒருவயோதிகரை மணக்கநேரிட்டு விட்டதே என்று வேதனையுற்று புலம்பினர். ராஜகுரு எல்லோரையும் சமாதானப்படுத்தி ‘நமது இளவரசி அன்னை பராசக்தியை அனுதினமும் ஆராதிப்பவள். அவளுக்கு ஒருகுறையும் வராது.‘ என்று தேற்றினார். செய்வதறியாது எல்லோரும் திரும்பினர்.

சியவனமுனிவரும் சுகன்யாவும் காட்டில் முனிவர்கள் வாழும் வானப்ரஸ்தம் என்ற வாழ்க்கையைத் தவங்கினர். பண்பில் சிறந்த சுகன்யா எந்தக்களங்கமும் இல்லாமல் கணவனை தெய்வமாக எண்ணிப் பணி செய்தாள். நீராட, தவம்செய்ய, உணவுஉண்ண என எல்லாவற்றிலும் ஒருதாயைப்போல் அம்முனிவரைப் பேணிப்பாதுகாத்தாள். அவளது நல்லகுணத்தையும் தாய்மைக் கருணையையும் அறிந்த சியவனர் சுகன்யாவிடம் அளவுகடந்த அன்புகொண்டு இல்லறத்தை இனிமையாக்கும் ஸ்ரீபார்வதிதேவியின் மந்திரத்தை அவளுக்கு உபதேசித்து அம்பிகையைப் பூஜிக்கும் முறைகளையும் கூறினார். கள்ளம் கபடமில்லாத அரசிளங்குமரி தமது தவறினால் கண்ணிழந்த கணவருக்கு மீண்டும் கண்தெரிய அருளவேண்டும் என்ற பிரார்த்தனையுடன் அன்னையை ஆராதித்துவந்தாள்.

சுகன்யாவின்பக்தியையும் கற்பு நெறியையும் கண்டு மகிழ்ந்த பார்வதிதேவி அவளது கற்புநெறியை உலகத்தினர் அறியும் வண்ணம் ஒரு திருவிளையாடல் நிகழ்த்தி பின் இன்பமான வாழ்க்கையை அருள திருவுள்ளம் கொண்டு தேவலோகத்தில் மிக அழகானவர்களாகிய அஸ்வினி தேவர்கள் என்ற இருவரை அவர்கள் வசிப்பிடத்திற்கு அனுப்பினாள். தவவாழ்க்கையில் இருந்த சுகன்யாவை அணுகிய அஸ்வினிதேவர்கள் ‘அரசிளங்குமரியேந உனது வயதுக்கும் அழகுக்கும் ஏற்ற கணவன் இந்த முதியவரல்ல. நாங்கள்தான். எங்களில் ஒருவரைத்தேர்ந்தெடுத்து மணம் செய்து கொண்டு இன்பமாக வாழ்வாயாக‘ எனக்கூறினர். இதைக்கேட்ட கற்புக்கரசியான சுகன்யா அவர்களைக்கோபத்துடன் நோக்கி ‘உடன் இங்கிருந்து சென்று விடுங்கள். இல்லையேல் எனது சாபத்திற்கு ஆளாவீர்கள்;இது அன்னைபராசக்தி மீது ஆணை‘  என எச்சரித்தாள். இச்சமயத்தில் தேவர்கள் பூமாரிப்பொழிய சுகன்யாவின் கற்புநெறியை உலகத்தோர் போற்ற அம்பிகையும் பிரத்யட்சமானாள். அம்பிகையை சுகன்யா பக்தியுடன் வணங்கி கணவருக்குக்கண்பார்வை அருள வேண்டினாள். பார்வதியும் புன்முறுவல் பூத்தமுகத்துடன் அங்கிருந்த குளத்தைக்காட்டி ‘உன் கணவனின் கைப்பற்றி இருவருமாக மூழ்கி எழுங்கள்‘ என உத்தரவிட்டாள். சியவனமுனிவரும் சுகன்யாவும் குளத்தில் மூழ்கி எழுந்தனர். உலகமே வியக்கும் ஆச்சரியம் நிகழ்ந்தது. வயோதிகமுனிவர் வாலிபனாகக் கண்கள் பளிச்சிட  மன்மதனையொத்த அழகுடையவராக மாறியிருந்தார். இருவரும் அரண்மனைக்குச்சென்று இன்பமாய் வாழ்ந்து சகல சௌபாக்கியங்களும் பெறுவீர்களாக என ஆசி வழங்கி அன்னை ஸ்ரீபார்வதி மறைந்தாள். சர்யாதா மன்னனும் மக்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. சகல ராஜமரியாதைகளடன் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.கற்பு நெறியோடு கணவனும் மனைவியும் பரஸ்பரம் அன்புடனும்  அன்னையை வணங்கியும்  வாழ்ந்தால் எல்லாக்குறைகளும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை கிட்டும் என்பதை ஸ்ரீதேவீபாகவதம் இக்கதையின் மூலமாக நமக்குத் தெரியப்படுத்துகின்றது.

பார்வதிதேவியை பூஜிக்கும் முறை:  தட்டத்தில் ஐந்து இதழ் தாமரைக்கோலமிட்டு அலங்கரித்து நடுவிலும் ஐந்து இதழ்களிலும் வெளியில் நான்குபுறமுமாகத் தீபங்கள் ஏற்றிவைத்து ஓம் ஸ்ரீ ஸ்வயம்வர பார்வத்யை நமஹ என அர்ச்சனை செய்யவும்.

மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதேந
மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே ஸதாநந
என்ற சுலோகம் சொல்லி புஷ்பம் சாத்தவும். உப்பில்லாமல் உளுந்து வடைசெய்து தேனில் ஊறவைத்தும் மொச்சைக்கடலை சுண்டலும் நிவேதனம் செய்து சுமங்கலிகளுக்கு அரக்குக்கலர் ரவிக்கைத்துண்டு மற்றும் மங்களப்பொருட்கள் கொடுக்கவும். முன்போல் ஆரத்தி எடுத்து பூஜையை நிறைவு செய்யவும்.

எட்டாம் நாள்: மானஸாதேவி

நாம் செய்யும் செயல்களின் பலனை அனுபவிப்பதே வினைப்பயன் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்... என வள்ளுவப் பெருந்தகையும் இக்கருத்தையே வலியுறுத்துகிறார். எனவே நாம் எவ்வித எதிர்பார்ப்புமின்றி நல்லதையே சிந்தித்தும் நல்லதையே செய்தும் எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டவேண்டும் என்பதே ஆன்றோர் தரும் அனுபவ மொழியாகும். இதுவல்லாது எக்காரணம் கொண்டும் எவ்வுயிர்க்கும் தீயது செய்யக்கூடாது. அப்படிச்செய்தால் அதன் பலனும் தீயதாகவே கிட்டி அனுபவிக்கநேரிடும். இதனையும் வள்ளுவர் தீயவை தீயபயக்குமாதலால் தீயவை தீயினும் அஞ்சப்படும் எனக் கூறுகிறார்.

பரதவம்சத்தில் பிறந்த பரீட்சித்து என்ற மன்னன் பாரததேசத்தை ஒரேகுடையின் கீழ் ஆண்டுவந்தான். வீரபராக்கிரமமும் ஆட்சித்திறனும் ஒருங்கே பெற்றிருந்த அவனிடம் மக்களும் நன்மதிப்பு வைத்திருந்தனர். ஒருநாள் வேட்டையாடுவதற்காகக் காட்டிற்குச்சென்றான். பகல் வெகுநேரம் காட்டில் திரிந்த மன்னன் உடன் வந்தவர்களைப்பிரிந்து தனியே சென்று கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு தாகம் மிகுதியாக எடுத்தது. எங்குதேடியும் தண்ணீர் கிடைக்காத பரீட்சித்து அங்கு ஒரு மரத்தடியில் முனிவர் ஒருவர் தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டான். அவரை அணுகி தாகத்திற்கு தண்ணீர் வழங்குமாறு கேட்டான். தியானத்திலிருந்த முனிவரின் காதுகளில் மன்னன் பலமுறை அழைத்தும் விழவில்லை. மிகப்பெரிய சக்கரவர்த்தியாகிய தான் வந்தும் மதிக்காத முனிவரை அவமதிக்க எண்ணிய மன்னன் அங்கு செத்துக்கிடந்த ஒருபாம்பை எடுத்து அவர் கழுத்தில் போட்டுவிட்டு சென்றுவிட்டான். சிறிதுநேரம் கழித்து முனிவரின் குமாரர் அங்கு வந்தார். அவரும் பெரிய தவயோகி. தமது தந்தையின் கழுத்தில் செத்த பாம்பு கிடப்பதைப்பார்த்து அதை உடனே அகற்றி தந்தைக்கு இப்படிச்செய்தவர் யார் என்பதை ஞானக்கண்ணால் அறிந்தார். தவறு செய்தவன் பரீட்சித்து மன்னன் என்பதை அறிந்து ‘பாம்பினால் தந்தையை அவமதித்த மன்னன் இன்றிலிருந்து ஏழுநாட்களுக்குள் பாம்பு தீண்டி இறப்பானாக‘ எனச்சபித்து விட்டார். முனிகுமாரரின் சாபத்தைப்பலிக்கச்செய்ய நாகலோகத்தில் ஆலோசனை நடக்கத்துவங்கியது. தட்சகன் என்ற நாகம் அரசனைக் கொல்வது என முடிவாகிப் புறப்பட்டது.

இச்செய்தி மன்னனுக்கும் சென்றது. பயத்தினால்நடுங்கினான். மந்திர மாயங்கள் எல்லாம் செய்தான். தவறு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் என்பது நீதியாதலால் ஒன்றும் பலிக்கவில்லை. கடலின் நடுவே மிகப்பெரிய பாதுகாப்புடன் கூடிய வசிப்பிடம் தயாராகியது. சுற்றிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் பாதுகாத்து நின்றனர். மந்திர தந்திரங்களில் கைதேர்ந்தவர்கள் விழிப்புடன் தயார் நிலையில் இருந்தனர். நாட்கள் இரண்டாகியது. மன்னன் தூக்கமின்றித் தவித்தான். எளிதில் பாம்பு நெருங்காத வண்ணம் ஒற்றைச்சங்கிலியில் தொட்டில் கட்டி அதில் அமர்ந்த வண்ணமே இருக்கத்துவங்கினான். ஒருநாள் யாரோசில முனிவர்கள் மன்னனைக்காக்க மாம்பழங்களுடன் வந்திருப்பதாக அறிவித்தனர். உடனே அவர்களை அழைத்தான். நடுவில் நின்ற முனிவர் ஒருமாம்பழத்தை எடுத்து ‘மன்னா இதைச்சாப்பிட்டால் எந்த விஷமும் உன்னைக் கொல்லாது‘ என்று ஒருபழத்தை அவனிடம் வழங்கினார். முனிவர்களாக வந்தவர்கள் நாகர்கள் என்பதையும் மாம்பழத்தின் உள்ளே வண்டு வடிவில் தட்சகன் என்ற நாகம் மறைந்துள்ளதையும் யாரும் அறியவில்லை. மன்னன் அந்த மாம்பழத்தை உண்பதற்காக கத்தியால் நறுக்க அதனுள் இருந்த வண்டு மிகப்பெரிய நாகமாக மாறி அவனைத்தீண்ட மன்னன் மாண்டுவிட்டான். முனிவரின் சாபம் பலித்ததும் வந்திருந்த நாகங்கள் மறைந்தன.

இச்செய்தியறிந்து பரீட்சித்து மன்னனின் மகன் ஜனமேஜயன் ஓடிவந்தான். தந்தை இறந்ததையறிந்து அழுதுபுலம்பினான். உடனிருந்தோர் அவனைத்தேற்றி ஈமக்கிரியைகளைச் செய்யவைத்து ஜனமேஜயனை அடுத்த மன்னனாக்கினர். தந்தையைக்கொன்றது ஒருபாம்பு எனக்கோபப்பட்ட அவன் எல்லாப்பாம்புகளையும் அழித்துப்பழி வாங்க சபதமெடுத்தான். மிகப்பெரிய யாகம் ஒன்று செய்தான். அதற்குப்பெயர் சர்ப்பயாகம். எவ்வளவோ எடத்துச்சொல்லியும் ஜனமேஜயன் கேளாததால் அரசாணைக்குப்பயந்து அந்தணர்கள் யாகத்தைத்துவங்கினார்கள். கூட்டம் கூட்டமாக நாகங்கள் யாகத்தீயில் விழுந்து சாம்பலாகத்துவங்கின. பரீட்சித்தைக்கொன்ற தட்சகன் நாகம் பயந்துபோய்  இந்திரனிடம் தஞ்சமடைந்தது. இந்திரனும் ‘எனது சிம்மாஸனத்தைச்சுற்றிக்கொள். உன்னை யாகமந்திரத்தினால் இழுக்கமுடியாது‘ என அபயம் அளித்தான். இதனை யாகம் செய்தவர்கள் அறிந்து இந்திரனுடன் சேர்ந்து தட்சகன் வரக்கடவது என மந்திரம் சொல்லி யாகம் வளர்த்தனர்.

இது ஒருபுறம் இருக்க; ஆஸ்தீகர் என்று ஒரு முனிவர். அவரது மனைவியின் பெயர் மானஸாதேவி என்பதாகும். அவள் அம்பிகையின் வரத்தினால் சக்தி அம்சம் பொருந்தியவள். தாய்மையின் கருணை பூரணமாக உடையவள். தமது கணவரும் மகா தபஸ்வியுமான ஆஸ்தீகமுனிவரை வணங்கி ‘தாங்கள் சென்று யாகத்தை நிறுத்த வேண்டும்‘ என்று வேண்டினாள். தந்தை மரணத்திற்குப் பழிவாங்க ஜனமேஜயன் யாகம் செய்கிறான். அவனைத்தடுத்து நிறுத்தும் சக்தி யாருக்கும் கிடையாது என்று மறுக்கிறார். மானஸாதேவி கணவரை அன்புடன் நோக்கி; ‘தங்களுக்குத்தெரியாத தர்மமில்லை. தவறு செய்தவர் யாராக இருந்தாலும் தண்டனைக்குறியவர்கள் என்பது வேதம் போதிக்கும் நீதியல்லவா? பரீட்சித்து சுயநலத்திற்காக முனிவரை அவமதித்துத் தவறு செய்தான். தண்டிக்கப்பட்டான். ஜனமேஜயன் ஏதும் அறியாதவன். அறவழியைப் போதிக்கும் வேதங்களைக் கற்றத் தாங்கள்தான் அவனுக்கு நியாயத்தை எடுத்துச்சொல்லி இந்த அபத்தமான யாகத்தை நிறுத்தியருள வேண்டும். தங்கள் சொல் அவன் மனதைமாற்றும். அஞ்சவேண்டாம்‘ எனக்கூறுகிறாள்.

பராசக்தியின் அம்சம்பெற்ற மானஸாதேவி கூறினால் அது பலிக்கும் என்று முனிவருக்கும் தெரியுமாதலால் சர்ப்பயாகம் நடந்த யாகசாலைக்குச் சென்று ஜனமேஜயனிடம் ‘உடனடியாக யாகத்தை நிறுத்து. இப்படிச்செய்தால் இதன் பாவம் உனது சந்ததிகளையும் பாதிக்கும். நாட்டிற்கும் கேடுவிளைவிக்கும்‘ என்றார். யார் சொல்லியும் கேளாத மன்னனின் மனம் மானஸாதேவியினால் அனுப்பப்பட்ட ஆஸ்தீக முனிவரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டது. இருப்பினும் மகாசக்கரவர்த்தியாகிய தனது தந்தையின் மரணம் வீரமரணமாக இல்லாமல் பாம்புதீண்டி நிகழ்ந்ததை எண்ணி முனிவரைப்பார்த்து வணக்கத்துடன் ‘பெருமானேந பொறுத்தருளவேண்டும். என்மனம் ஆறவில்லை. பழிக்குப்பழி வாங்குவது என்பது க்ஷத்திரியர்களின் இயல்பு. தாங்கள் இதில் தலையிடாதீர்கள்‘ எனவேண்டினான். ஆஸ்தீக முனிவர் வேதங்களையும் நீதிநூல்களையும் எடுத்துக்காட்டி நீண்ட அறிவுரை வழங்கினார். ஒருமுனிவரை அதுவும் தவத்திலிருந்ததால் தன்னைச்சுற்றி நிகழும் எதையும் அறியாமலிருந்தவரை அவமதிப்பது தெய்வகுற்றமாகும். இந்த மகாபாவத்தைச் செய்தும் உன் தந்தை உயிரோடிருந்தால் அறத்தின் வாய்மைக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். நீயும் மக்களும் இந்நாடும் சுபிட்சம் இழந்து வாடியிருப்பீர்கள். நடந்ததெல்லாம் தெய்வச்செயல். கெட்டதையெல்லாம் மறந்து நீதிநெறி தவறாமல் ஆட்சி செய்ய முதலில் யாகத்தை நிறுத்து என உபதேசித்தார். பரதவம்சத்தில் பிறந்தவனாதலாலும் மாந்தாதா,யது,ஸ்ரீராமன் போன்றோரை முன்னோர்களாகப் பெற்றிருந்தவனாதலாலும் நீதிக்குக்கட்டுப்பட்டு மானஸாதேவியின் அருளால் ஆஸ்தீகமுனிவர் கூறிய அறிவுரைகளை ஏற்று சர்ப்பயாகத்தை நிறுத்தினான். அப்போது அங்கு மானஸாதேவியும் வருகைதந்து தனது சக்தியினால் யாகத்தீயில் பொசுங்கிய நாகங்களை மீண்டும் உயிர்த்தெழச்செய்து தட்சகன் உட்பட அனைத்து நாகங்களையும் காப்பாற்றினாள். நாகலோகமே மகிழ்ந்தது. பாம்புகள் தேவியை பூஜித்து வழிபட்டனர். மானஸாதேவியை வழிபடுபவர்களை இனித்தீண்டமாட்டோம் என பிரமாணமும் செய்தனர்.

யாகத்தை நிறுத்தினாலும் தந்தையின் மறைவுதந்த வேதனையால் ஜனமேஜயன் மட்டும் மனம் ஆறாமலும் சோகத்துடனும் இருந்தான். அவனை சாந்தப்படுத்த அன்னை பராசக்தியின் அருள் வரலாறுகளைக் கூறினார் முனிவர். அசுரர்களை அழித்து மூவுலகையும் காப்பாற்றியது, இந்திரன் மனைவி சசிதேவியின் கற்பைக்காத்தது என நாம் தொடர்ந்து சிந்தித்து வரும் கதைகளையெல்லாம் கூறினார். இவற்றையெல்லாம் ஒவ்வொன்றாகக் கேட்க கேட்க அவனது மனம் கோபமும் சோகமும் நீங்கி சாந்தமடைந்தது. நவராத்திரி வழிபாட்டின் மகிமையறிந்து தாமும் அன்னையை ஆராதிக்க விரும்பினான். ஆஸ்தீகமுனிவரும் மானஸாதேவியும் உபதேசிக்க மன்னன் ஜனமேஜயன் விரதமிருந்து அன்னையை வழிபட்டு வரங்கள் பலபெற்று திருமணம் புத்ரபாக்யம் என எல்லா மங்களங்களும் பெற்று நல்லாட்சி செய்தான்.

இந்த வரலாறு பல விஷயங்களை நமக்கு உணர்த்துவதாக ஸ்ரீமத் தேவீபாகவதம் எனும் நூலில் அமைந்துள்ளது. எக்காரணம் கொண்டும் பெரியவர்களையும் பெற்றோர்களையும் வழிகாட்டும் குருநாதர்களையும் வேதம்கற்றவர்களையும் அறிஞர்களையும் அவமதிக்கக்கூடாது. நியாய தர்மங்களை சீர்தூக்கிப்பார்க்காமல் கோபத்தினாலும் அவசரபுத்தியினாலும் மதியிழக்கக்கூடாது. எந்த உயிரையும் துன்புறுத்தக்கூடாது. இவைகளை ஏற்று நல்வழியில் வாழ்ந்தால் நமக்கும் நாம் வாழும் நாட்டிற்கும் நல்லது. எந்த சூழலிலும் அறிவுத்தடுமாற்றம் ஏற்படாமல் நிதானத்துடன் செயல்பட இதுபோன்ற அன்னையின் அற்புத வரலாறுகளைப் படித்தும் கேட்டும் இன்புற வேண்டும்.

இக்கதையைப்படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் விஷஜந்துக்களினால்.ஆபத்து ஏற்படாது. குணப்படுத்தமுடியாத நோய்களெல்லாம் குணப்படும். ஸ்ரீமானஸாதேவியை வழிபடுபவர்களுக்கு நாகதோஷம் நீங்கும். ஹரித்வாரில் கங்கைக்கரையில் தனிக்கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள்.

பூஜிக்கும் முறை: பெரிய தட்டத்திலோ அல்லது தூய்மையான தரையிலோ நடுவில் அறுகோணமும் அதை நாகம் சுற்றியிருக்குமாறும் கோலமிட்டு அலங்கரித்து நடுவில் குத்துவிளக்கேற்றி சுற்றி எட்டுதீபங்கள் ஏற்றவும். ஓம் ஸ்ரீ மானஸாதேவ்யை நமஹ என்று அர்ச்சனை செய்து கீழ்வரும் சுலோகம் சொல்லி புஷ்பம் சாத்தவும். நர்மதாயை நம:ப்ராதஹ நர்மதாயை நமோநிசிந நமோஸ்து நர்மதே துப்யம் ரக்ஷமாம் விஷ ஸர்ப்பதஹந அபசர்ப்ப சர்ப்ப பத்ரம்தே தூரம் கச்ச மஹாயசா:ந ஜனமேஜயஸ்ய யக்ஞாந்தே ஆஸாதீக வசனம் ஸ்மரன்நஜரத்காரோ ஜரத்கார்வாம் ஸமுத்பன்னா மஹாயசா:ந ஆஸ்தீகஸ்ஸத்ய ஸந்தோமாம் பன்னகேப்யோபி ரக்ஷதுந அம்பிகா சக்திசம்பூதா மானஸா மங்களப்ரதாந ஸமஸ்தபய ஸம்ஹந்த்ரீ ரிஷிபத்னீ ஹி ரக்ஷதுநந -    இந்த சுலோகத்தை உச்சரிப்புடன் கற்று சொல்லிவருபவர்களுக்கு எவ்விதபயமும் ஏற்படாது. கற்கண்டு திராட்சை ஏலக்காய்குங்குமப்பூ கலந்து காய்ச்சிய பசும்பாலும் கொத்துக்கடலை சுண்டலும் நிவேதனம் செய்து சுமங்கலிகளுக்கு ஊதாக்கலர் ரவிக்கைத்துண்டு மற்றும் மங்களப்பொாருட்கள் வழங்கி ஆரத்தி எடுத்து பூஜையை நிறைவு செய்யவும்.

ஒன்பதாம் நாள்:  மஹாஸரஸ்வதி

ஸரஸ்வதி கடாட்சம் என்பது லட்சுமி கடாட்சம் போன்றது.பணத்தை நமக்காக நம் பெற்றோர்கள் சேமித்து வைக்கலாம். அல்லது பிறரை அண்டியும் பிழைக்கலாம். இதுபோன்ற எந்த வழிகளிலும் பெறமுடியாதது அறிவாகும். படிப்பு வயது இவைகளினால் மட்டும் அறிவுமுதிர்ச்சி ஏற்பட்டுவிடாது. சிலர் நிறைய படித்திருப்பார்கள். ஆனால் அதைப்பயன் படுத்தும் முறையறியாமல் வேலைதேடியே காலத்தைக்கழிப்பார்கள். ஒரு விஷயத்தை சட்டெனப்புரிந்து கொள்ளவோ அல்லது பிறருக்குப்புரிய வைக்கவோகூட அவர்களால் இயலாமல் இருப்பதைக்காணலாம். அதுபோல சிலர் எத்தனை வயதானாலும் அறிவு மற்றும் அனுபவ முதிர்ச்சி எதுவுமே இல்லாமல் பிறரால் இகழப்படுவதும் பல இடங்களில் நிகழும் ஒன்று. பள்ளிப்பக்கமே செல்லாத மெய்ஞானிகளும் விஞ்ஞானிகளும் நிறைந்தது நம் பாரதநாடு. ஓரிரண்டு வயதிலேயே அறிவாற்றல் பெற்று பிறரை நல்வழிப்படுத்தியவர்களைக்கொண்டது நம் இந்து மதம். ஊமை செவிடு குருடு போன்ற மாற்றுத்திறனாளிகளும் மாமேதைகளாகத்திகழ்வது காலம் காலமாய் நம் நாட்டில்தான். சரஸ்வதிக்கு பாரதி என்று ஒரு பெயர் உண்டு. இயலாதவர்களையும் ஊக்கப்படுத்தி வாழ்விப்பவள் என்று பொருள். பாரதிதேவியின் வசிப்பிடமாகத் திகழ்வதாலேயே பாரதம் எனும் சிறப்புப்பெயர்கொண்டது நம்நாடு. ‘பாரதநாடு பழம்பெரும் நாடு.நீர் அதன் புதல்வீர்!! ‘என்று இந்நாட்டில் பிறந்தவர்களைப் பெருமைப்படுத்திய மகாகவி தமது பெயரையே பாரதி என்றுதானே வைத்துக்கொண்டார்!

நான்கு வேதங்களையே சட்டமாகக் கொண்டு கலாசாரம் நாகரீகம் ஆன்மீகம் விஞ்ஞானம் என எல்லாவற்றிலும் உலகிற்கு ஓர் வழிகாட்டியாய் பாரதம் விளங்குகிறது. வித் எனும் வேர்ச்சொல்லிலிருந்து வருவது வேதம் எனும் சொல். வித் என்றால் ஞானம் அறிவு உயிர் என பலபொருள்கள் சொல்லலாம். உயிரும் அறிவும் இணைவதுதான்  உலகவாழ்க்கை என்பதால் உலக உயிர்களுக்கெல்லாம் அறிவு எனும் அற்புதத்தை இறைவன் வழங்கியுள்ள பெருங்கருணையைப் போற்றி வழிபடுவது நம் இந்து தர்மத்தில் மட்டும்தான் முறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஸாவித்ரீ காயத்ரீ சரஸ்வதி என அறிவையே பெண்தெய்வ உருவில் வழிபடுமாறு நம் சாத்திரங்கள் கூறுகின்றன. எதைச்செய்வதானாலும் நமக்கு சக்தி தேவைப்படுகிறது. சக்தி என்றால் ஆற்றல். உடலுக்கு ஆற்றல் தேவைப்படுவது போல அறிவுக்கும் ஆற்றல் தேவைப்படுகிறது. இது முன் சொன்னதுபோல படிப்பினாலும் வயதுமுதிர்ச்சியினாலும் மட்டும் கிடைத்துவிடாது. இயல்பாகவே அதிக சக்தி வாய்ந்தது நம் மனம். நம்மை நல்லது அல்லது  தீயது என்ற வழிகளில் செயல்படத்தூண்டுவதும் அதுதான். தீய ஆசைகளினால் தவறான பாதைகளில் செல்லமுற்படுவது, சோம்பேறித்தனத்தினால் தமக்கும் பிறருக்கும் எந்த ப்ரயோஜனமுமில்லாமில்லாமல் வாழ்வது, முக்கியமான நேரத்தில் செயல்படமுடியாமல் ஞாபகமறதி போன்றவற்றினால் தடுமாறுவது போன்ற எத்தனையோ விஷயங்களுக்குக் காரணம் மனதைக் கட்டுப்படுத்தி ஆளும் ஆற்றல் அறிவுக்குப் போதாமைதான்.

உலகின் மிகச்சிறந்த மந்திரமாகப்போற்றப்படுவது காயத்ரீ மந்திரம். ‘என் அறிவானது  மனதையடக்கி. நல்வழிப்படுத்த இயலாமல் மங்கும்போதெல்லாம் ஞனமேவடிவாகிய அந்த சக்தியானவள் அறிவுக்கு ஆற்றலைத் தந்தருள வேண்டும்‘ என்பது  அந்த மந்திரத்தின் பொருளாகும். இதுதான் பாரதத்தின் ஒட்டுமொத்த அறிவாற்றலுக்கும் காரணம் என்பதைக்கண்ட மற்றய நாடுகளும் மதங்களும் இன்று காயத்ரீ மந்திரத்தைக் கற்று ஓதத்துவங்கியுள்ளனர். இப்படி வேதங்கள் சாத்திரங்கள் மற்றும் உலக உயிர்களின் அறிவாக இருக்கும் சக்தியை ஸ்ரீமஹாஸரஸ்வதி தேவியாக வழிபடும் நாளாக இன்றய ஒன்பதாவது நாள் நவராத்திரியைக் கொண்டாடி அருள் பெறுவோமாக. பொய் சூது வாது ஆகிய தீயகுணங்கள் கொண்டவர்களை அம்பிகை  விரும்பமாட்டாள். உண்மை பக்தி அன்பு கொண்டவர்கள் எவ்வளவு வறியவர்களாக,இயலாதவர்களாக இருந்தாலும் அவர்களைத்தேடிச்சென்று அறிவாற்றல் எனும் பெரும் ஐஸ்வர்யமாகிய சக்தியை அருளுவாள்.

தவம் செய்யும் முனிவர்கள் நிறைந்த ஒருவனத்தில் ஒரு முனிவர் புத்ரபாக்கியமில்லாமல் இருந்தார். குழந்தைவேண்டி மிகப்பெரிய  யாகம் செய்தார். யாகத்தை நடத்துவதற்காக வந்த வேதியர்களில் ஒருவர் தொண்டுக்கிழவராக இருந்தார். மற்றவர்கள் உரக்க மந்திரங்களை ஓதியபோது அவரால் ஈடு கொடுக்க இயலாமல் மூச்சுத்திணற  நிறுத்தி நிறுத்தி ஓதினார். இதைக்கண்டு குழந்தைவேண்டி யாகம் செய்தவர் முதியவரை ஏளனம் செய்துவிட்டார். இதனால்  சிறந்த அருளாளராகிய அவ்வேதியர் மனம் வருந்தி பாதியிலேயே வெளியேறிவிட்டார். யாகம்முடிந்து சிலகாலம் கழித்து வேள்வியின் பயனாய் குழந்தை பிறந்தது. முதியவேதியரின் மனம்வருந்த யாகம் நடத்தப் பட்டதால் பிறந்த ஆண்குழந்தை ஊமையாகப் பிறந்தது. எக்காரணத்தைக் கொண்டும் எந்தசூழலிலும் பெரியவர்களை அவமதிப்பது கூடாது என நம் மூதுரைகள் கூறுவதற்கு இதுவே காரணம்.

ஊமைப்பையன் வளர்ந்தான். காட்டில் மற்ற முனிவர்களின் பிள்ளைகளுடன் விளையாடச்செல்லும் போதெல்லாம் யாரும் இவனை சட்டை செய்வதில்லை. ஊமை என்று கேலியும் பேசினார்கள். இதனால் மனம் வருந்தி அந்தப்பையன் தனிமையை நாடிச்சென்றான். ஒரு ஆற்றங்கரையின் மரத்தடியைத் தமது வசிப்பிடமாக்கிக்கொண்டான். கலையில் எழுந்து குளித்து கண்மூடி காயத்ரீ மந்திரம் ஜபம் செய்வான். கிடைத்த பழங்களை உண்டு மற்றய நேரங்களில் இறைவனை எண்ணி தியானம் செய்யப்பழகினான். மனம் பக்குவப்படத்துவங்கியது. தனக்குத்தானே சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டான். எக்காரணத்தைக்கொண்டும் எந்தச்சூழலிலும் பொய்பேசக்கூடாது; யாரையும் துன்புறுத்தக்கூடாது என்ற நியமங்களை வகுத்துக்கொண்டான். பெற்றோர்கள் மற்றும் சுற்றார்கள் எல்லோரும் வந்து எவ்வளவோ வற்புறுத்தியும் ஆறுதல் கூறியும் அழைத்தார்கள். அதற்கெல்லாம் இறங்காமலும் தமது வைராக்கியத்தை விடாமலும் வாழத்துவங்கினான். சத்தியத்தையே விரதமாமக்கொண்டு வாழும் அவனது ஆற்றலைக்கண்டு வியந்த எல்லோரும் சத்தியவிரதன் என்று அவனை அழைக்கத்துவங்கினர்.

நாட்கள் சென்றன. சரஸ்வதிதேவியின் கடைக்கண் பார்வை அவனுக்குப் பூரணமாகக் கிட்டும் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. ஒருநாள் சத்தியவிரதன் கண்மூடி தவம் செய்து கொண்டிருந்தான். அப்பொழுது காட்டுப்பன்றி ஒன்று  உறுமிக்கொண்டு ஓடிவரும் சத்தம் கேட்டு விழித்துப்பார்த்தான். உடலில் அம்புகுத்தி ரத்தம் பெருக அப்பன்றி ஓடுவதைக்கண்டான். அதைப் பார்த்து மிரண்ட ஊமைச்சிறுவன் ஐய்ய்..... என்று கூவினான். பன்றியும் ஓடி  மறைந்தது. அதைத்தேடி வேடன் ஒருவன் ஓடிவந்தான். பன்றியைக் காணாத வேடன் சத்தியவிரதனை அணுகி ‘தவசீலரே உம்மை வணங்குகிறேன்.   இன்று ஒரு பன்றியைக்கண்டு அதன்மீது அம்பு எய்துவிட்டேன். இந்தப்பக்கமாகத்தான் ஓடிவந்தது. தாங்கள் அதைப்பார்த்திருபீர்கள். எங்கு சென்றது என்று தயவு செய்து கூறுங்கள்.‘ என்று வேண்டினான். ஊமைச்சிறுவனுக்கு தர்மசங்கடமான சூழல். பன்றியைக்காப்பாற்ற வேண்டும் எனக் கருணை கொண்டால் நான் பார்க்கவில்லை என்று  பொய்பேசவேண்டும். சத்தியமே விரதமாகக் கொண்டிருப்பதால் அதிலிருந்து வழுவும் நிலை ஏற்படும். இந்தப்பக்கமாகத்தான் சென்றது எனக்கூறினால் ஒரு உயிர் துன்பப்படுவதற்குக் காரணமாகவேண்டும். இதை சமாளிக்க அருள்புரிய வேணுமாய் சரஸ்வதிதேவியை மனமார வேண்டினான்.    
                  
ஐய்ய்.... என்று அவன் கூவியது  சரஸ்வதியின் ஐம் எனும்  பீஜாட்சர மந்திரத்தின் ஒருபகுதியாகும்.அவனது சத்தியம் தவறாதநெறியையும், பக்தியையும் ஏற்று அன்னை சரஸ்வதி தமது கடைக்கண் பார்வையால் அவனது ஊமைத்தன்மை நீங்கிடவும் மிகப்பெரிய அறிவாளியாகவும் அருள் பாலித்தாள். ஊமைப்பையன் மிகப்பெரிய ஞானியாகப் பேசத்துவங்கினான்.  ஸ்ரீமத் தேவிபாகவதம் அவன் பேசிய இரண்டு வார்த்தைகளும் ஒப்பிட முடியாத பெருமை வாய்ந்ததாகக் கூறுகிறது.

யா பஸ்யதி ஸா நவததி
யா வததி ஸா ந பஸ்யதிந

இவைகளே அவன் பேசிய இரு வார்த்தைகளாகும். எது கண்டதோ அது பேசாது. எது பேசுமோ அது காணாது; என்பது அதன் பொருள். அதாவது என் கண்கள் கண்டிருக்கலாம்..ஆனால் அது பேசாது. என் வாய் பேசும். ஆனால் அதற்கு காணும் சக்திகிடையாது. இவ்வாறு கூறி பொய்யும் பேசாமல் பன்றியையும் காப்பாற்றிவிட்டான்.

இப்படி ஊமையாகப்பிறந்து சத்தியத்தையே விரதமாகக்கெண்டு தவம்செய்து சரஸ்வதி அருளால் பேச்சாற்றல் பெற்றதுடன் அறிவாற்றலும் பெற்ற சத்தியவிரதன் பின்னாளில் நிறைய நூல்களும் எழுதியுள்ளார். மஹாநவமி எனப்படும் சரஸ்வதிபூஜை நன்னாளில் அம்பிகையை வழிபட்டு அறிவாற்றலும் மன உறுதியும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வோமாக.

பூஜை செய்யும் முறை: சரஸ்வதி பூஜையன்று செய்யவேண்டிய புத்தகங்கள் மற்றும் ஆயுதபூஜைகளை வழக்கம்போல் செய்து மாலை வழிபாட்டில் நடுவில் நான்கு இதழ்களும் சுற்றிலும் எட்டு இதழ்களும் கூடிய தாமரைக்கோலமிட்டு அலங்கரிக்கவும். மையத்தில் ஓம் என்றும் எல்லாஇதழ்களிலும் ஐம் என்றும் எழுதவும். மையத்தில் குத்துவிளக்கும் நான்கு மற்றும் எட்டு இதழ்களில் தீபங்கள் ஏற்றிவைத்தும்

ஓம் ஸ்ரீமஹாஸரஸ்வத்யை நமஹந
ஓம் ஐம் வாக்தேவ்யை நமஹந
ஓம் ஞான தாயின்யை நமஹந
என்றும் அர்ச்சனை செய்யவும்.
மேதே ஸரஸ்வதிவரே பூதி பாப்ரவிதாமஸிந
நியதே த்வம் ப்ரஸீதேஸி நாராயணி நமோஸ்துதேநந- என்ற மந்திரம் சொல்லி புஷ்பம் சாத்தவும். குமரகுருபரஸவாமிகள் அருளிய சகலகலாவல்லி மாலை மற்றும்  அபிராமிபட்டர் அருளிய ’கலையாத கல்வியும்’ எனும் பாடல்களைப்பாடித்துதிக்கவும். பால்கற்கண்டுசாதம் மற்றும் இனிப்புப்பண்டங்களுடன் பாசிப்பருப்பு சுண்டலும் நிவேதனம் செய்து சூடம் ஏற்றிக்காண்பிக்கவும். சுமங்கலிகளுக்கு சந்தனக்கலர் ரவிக்கைத்துண்டுடன் மங்களப்பொருட்களும் வழங்கி நிறைவில் ஆரத்தி எடுத்து தீபத்தை பூஜையறையில் சேர்த்து நிறைவு செய்யவும்.  

பத்தாம் நாள்: விஜயதசமி

நவராத்திரி ஒன்பது நாட்களும் விரதம் இருந்து வழிபட்ட நமக்கு எல்லா வரங்களையும் அம்பிகை வழங்குகின்ற நன்னாள் விஜயதசமியாகும். ஜயம் என்றால் வெற்றி. விஜயம் என்றால் சிறப்பானவெற்றி என்றும் அபாரவெற்றி என்றும் கூறலாம். நல்ல விஷயங்களுக்காக ஒரு இடத்திற்குச் செல்வது ஒரு காரியத்தைத்துவங்குவது என எல்லாவற்றிற்கும் பொருந்தும் சொல் விஜயம் என்பதாகும்.

மற்றய விரதங்கள் வழிபாடுகள் எல்லாவற்றையும் விட சிறப்பானது நவராத்திரி விரதமாகும். ஏனெனில் நாம் எந்த வேலையைச் செய்தாலும் ஒரு கருவி தேவைப்படுகிறது. எழுதும் பேனா, படிக்கும் புத்தகம், தொழில் செய்ய இயந்திரங்கள், மண்வெட்டி, கத்தி, கடப்பாறை, ஏர்கலப்பை, பயணம்செல்ல உதவும் மாடு குதிரை யானை வண்டிகள் இன்றய நாகரீக உலகில் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர மோட்டார்கள்  பாலுக்குப்பசுக்கள் என நம் வாழ்க்கைத்துணைகளாக எத்தனையோ கருவிகளைச் சொல்லலாம்.
    
ஒருவேலையானது முழுமையாக நடைபெறவேண்டுமானால், மூன்று விஷயங்கள் ஒன்றுபட வேண்டும் என்பது நியதி. காரியம், கரணம்,கர்த்தா என்பவை அவை மூன்றுமாகும். காரியம் என்றால் வேலை. அதைச்செய்பவர் கர்த்தா. ஒரு கர்த்தா காரியத்தைச்செய்ய வேண்டுமானால் அதற்கு பயன் படும் பொருட்கள் மற்றும் கருவிகள் அனைத்துமே கரணங்கள் எனப்படுகின்றன. வேலை செய்பவர்கள் தக்கக்கருவிகளைக் கொண்டு திறமையாகச் செயல்பட்டால் காரியம் நல்லபடியாக முடிந்து தக்க பலன் கிடைக்கும் என்ற அடிப்படையில் திறமை என்பது சரஸ்வதியின் அருளாலும் பலன் என்பது லட்சுமியின் அருளாலும் கருவிகளின் இயக்கம் துர்க்கையின் அருளாலும் நிகழ்த்தப்படுவதால்தான் இம்மூன்று தெய்வங்களையும் நவராத்திரியில் வழிபடுவதுடன் இந்நாட்களில் கரணங்கள் எனப்படும் அனைத்துக்கருவிகளையும் பூஜையில் வைத்து வழிபடவேண்டும். கர்த்தா எனப்படும் நாம் அனைவருமே அன்னையை வழிபடுவதையே காரியமாகக் கொண்டு விரதமிருக்க வேண்டும்.

இது சாத்தியமா என்று கேட்கலாம். பழங்காலத்தில் மன்னர்கள் இப்படித்தான் நவராத்திரியைக் கொண்டாடியுள்ளதாக புராணங்களும் வரலாறுகளும் கூறுகின்றன. அரண்மனையின் அனைத்து உபயோகப் பொருட்களையும் வாகனங்களையும் தினமும் கொலுமண்டபத்தில் வைத்து பூஜை செய்திருக்கிறார்கள். அதற்கான பூஜை விதிமுறைகள் மற்றும் மந்திரங்கள் அடங்கிய புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. இன்றும் மைசூர் மன்னர் பரம்பரையினர் இக்கலாசாரத்தைக்காப்பாற்றி வருவதும் தக்க சான்றாகும். இவ்வழக்கமே இக்காலத்தில் பொம்மைகளாக எல்லாவற்றையும் கொலுவைப்பது என மாறியுள்ளது. நவராத்திரி ஒன்பது நாட்களும் அன்னையையும் ஆயுதங்களையும் பூஜையில்வைத்து வழிபட்டு விஜயதசமி நன்னாளில் படிப்பு வேலை தொழில் வியாபாரம் என எதைத்துவங்கினாலும் வெற்றியைத்தரும் என சாத்திங்கள் கூறுகின்றன. காலம் காலமாய் நாமும் கொண்டாடி வருகிறோம்.

இன்றய அவசர வாழ்க்கையில் தேவைக்கேற்ப சரஸ்வதி பூஜையன்றே  ஆயுதபூஜை செய்து, மறுநாள் விஜயதசமியில் எடுத்துப்புழங்கும் வழக்கம்  இடையில்தான் ஏற்பட்டுள்ளது. எல்லாத்திருக்கோயில்களிலும்கூட அம்புச்சொக்கர் என்றபெயரில் சிவபெருமானும் அம்மன் திருக்கோயில்களில் துர்க்கை காளி முதலிய தெய்வங்களும் புறப்பாடாகி ஊர்புறத்தேயுள்ள வன்னிமரத்தில் அம்பு எய்தருளும் விழா இன்றளவும் நடைபெற்று வருவது என்பது, விஜயதசமியில்தான் கருவிகளை உபயோகப்படுத்தத்துவங்க வேண்டும் என்பதை இறைவனே செய்து நமக்கு வழிகாட்டுவதாக அமைந்துள்ளது. மகாபாரதத்தில் கௌரவர்களின் சூழ்ச்சியால் சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் ஒப்பந்தப்படி பனிரண்டு வருடவனவாசம் முடித்து ஒருவருடம் யாராலும் கண்டுபிடிக்கமுடியாத அக்ஞாதவாசத்தை விராடதேசத்தில் மாறுவேடம் பூண்டு யாரும் அறியமுடியாதபடி வாழ்ந்தார்கள். வருடம் பூர்த்தியாகும்வரை ஆயுதங்களையும் மறைத்து வைத்திருந்தார்கள். அர்ஜுனனின் புகழ்வாய்ந்த காண்டீபம் எனும் வில்லும் அம்புகளும் மற்றும் அவனது ஔிபொருந்திய போர்க்கவசங்களும் ஒரு வன்னிமரத்தின் பொந்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. வருடம் முடியும் சமயம் நவராத்திரியும் வந்ததால் திரௌபதையுடன் பாண்டவர்களும் அம்பிகை விரதம் இருந்து மானசீகமாக வழிபட்டு வந்தனர்.

இப்படியிருக்க பாண்டவர்கள் விராடதேசத்தில் ஔிந்திருப்பதை ஒற்றர்கள் மூலம் அறிந்த கௌரவர்கள் தந்திரமாக விராடதேசத்தின்மீது போர் தொடுத்தனர். அதாவது போர் என்று வந்தால் வீரமிக்க பாண்டவர்கள் ஔிந்திருக்க மாட்டார்கள். வெளியே வருவார்கள். யாரும் கண்டுபிடிக்கமுடியாமல் ஒருவருடம் வாழவேண்டும் எனும் ஒப்பந்தத்தை மீறினார்கள் என பழிசுமத்தி மீண்டும் பனிரண்டு வருடங்கள் வனவாசம் அனுப்பிவிடலாம் என்பது கௌரவர்களின் தீய எண்ணமாகும். போர் துவங்கியது. விராடனின் மகன் உத்தரனுக்குத்தேரோட்டியாக அர்ஜுனன் கிளம்பினான். உத்தரனுக்குப்போர்பயிற்சி அவ்வளவாகக்கிடையாது. தேரோட்டுபவன் அர்ஜுனன் என்பதும் அவனுக்குத் தெரியாது. போர்க்களத்திற்குச்செல்லுமுன் அர்ஜுனன் வன்னிமரத்தில்மறைத்து வைக்கப்பட்டிருந்த தமது போர்க்கவசங்களை அணிந்தும் காண்டீபம் எனும் வில்லையும் அம்புகளையும் எடுத்துக்கொண்டும்  தேரில் ஏறினான். தமது தேரோட்டியாக இருப்பவன் அர்ஜுனன் என்பதையறிந்த விராட இளவரசன் உத்தரன் மகிழ்ச்சியில் அதிர்ந்தான். அதேசமயம் அர்ஜுனன் தனது வில்லின் நாண்கயிறை இழுத்து டணார் எனும் பெரும் ஒலியெழுப்பினான். காண்டீபத்தின் சத்தத்தைக் கேட்டமாத்திரத்திலேயே கொளரவர் படை பயத்தில் அதிர்ந்தது. பல வீரர்கள் மூர்ச்சையானார்கள். சிலர் ஒப்பந்தம் மீறப்பட்டதால் பாண்டவர்கள் மீண்டும் காட்டுக்குச் செல்லவேண்டும் எனக்கூவினர். அர்ஜுனன் சிரித்தவாறு கொளரவர்கள் பக்கம் நின்ற தமது ஆசான் துரோணாசாரியாரின் திருவடிகளின் முன் விழுமாறு ஒரு அம்பை எய்து வீரவணக்கம் செலுத்தினான்.

ஆசாரிய துரோணரும் புன்முறுவருவலுடன் ஏற்று கௌரவர்களைப்பார்த்து நேற்றோடு ஒருவருடம் பூர்த்தியாகி விட்டதையும் இன்று விஜயதசமியில் விஜயன் போருக்கு வந்துள்ளதில் தவறில்லை என்றும்நிஅர்ஜுனனுக்கு விஜயன் என்றும் ஒரு பெயருண்டுநீ பேசிக்கொண்டிருக்காமல் காண்டீபத்திற்கு பதில் சொல்லுங்கள் என்றும் கூறி கண்டிக்க; போர்துவங்கியது. சிறுபடையே என்பதால் சிறிது நேரத்திலேயே வெற்றி கொண்ட அர்ஜுனன் பின்னாளில் நடந்த பாரதப்போரில் பாண்டவர்படை வெற்றிபெற்றதற்கு முக்கியக்காரணமாக விளங்கினான் என்பது உலகறிந்த விஷயம்.

வனவாசம் அக்ஞாதவாசம் முடிந்து விஜயனாகிய அர்ஜுனன் வெளிப்பட்டு அம்பிகையின் அருளுடன்  போரைத்துவங்கிய நாள் என்பதாலேயே இது விஜயதசமி என்று அழைக்கப்படுகிறது எனக்கூறுவோரும் உண்டு.இப்படிச்சிறப்பு வாய்ந்த விஜயதசமி நன்னாளில் காலை நல்லநேரத்தில் முதல்நாள் பூஜையில்வைத்த புத்தகங்கள் பேனா மற்றும் அனைத்து ஆயுதங்களையும்
ஓம் ஸ்ரீதுர்க்காயை நமஹ
ஓம் ஸ்ரீமகாலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீசரஸ்வத்யை நமஹ என அர்ச்சனை செய்து தயிர் அன்னம் நிவேதனம் செய்து சூடம் ஏற்றி தீபாராதனை செய்து புஷ்பாஞ்சலி செய்து எல்லோரும் நமஸ்காரம் செய்யவும்.

ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபினிந
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர்பவதுமே ஸதாநந -  எனும் சுலோகத்தைச் சொல்லி மாணவர்கள் படிக்கத்துவங்கவும். அவரவர்கள் தொழிலையும் அந்த நல்லநேரத்திலேயே துவங்கவும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், (பரிகார ஸ்தலம்),  குரு ... மேலும்
 
temple news
சோழவந்தான், சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோயிலில் இன்று மாலை குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர், திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில்  குரு பெயர்ச்சியை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூரில், பேரூர் பட்டி நாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பில், 450 கிலோ பூக்கள் கொண்டு, மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar