Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் ஆயுஷ் கிளினிக் திருப்பத்துார் அருகே 1,300 ஆண்டுகள் பழமையான நடுகல் கோட்டம் கண்டுபிடிப்பு திருப்பத்துார் அருகே 1,300 ஆண்டுகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீபாவளிக்காக வெளிநாடு செல்லும் நாட்டரசன்கோட்டை செட்டிநாடு முறுக்கு
எழுத்தின் அளவு:
தீபாவளிக்காக வெளிநாடு செல்லும் நாட்டரசன்கோட்டை செட்டிநாடு முறுக்கு

பதிவு செய்த நாள்

04 அக்
2017
12:10

சிவகங்கை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டரசன்கோட்டை செட்டிநாடு முறுக்குக்கு வெளிநாடுகளில் இருந்து ஆர்டர்கள்  குவிந்து வருகின்றன. சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் செட்டிநாட்டு பலகாரங்கள்  தயாரிக்கப்படுகின்றன.

இங்கு தயாராகும் முறுக்கு மொறுமொறுப்பாகவும், ருசியாகவும் இருக்கும். ஒருமுறை பாக்கெட் செய்தால் மூன்று மாதங்கள் வரை  கெடாது. இதற்கு சேர்மான பொருட்களின் தரமும், கை பக்குவமும் தான் காரணம் என்கின்றனர். மேலும் இங்கு மண் அடுப்பில் தான்  முறுக்கு சுடுகின்றனர். இதனால் சுவையும், மணமும் மாறாது என்கின்றனர்.  நாட்டரசன்கோட்டை முறுக்குக்கு தனி கிராக்கி. இந்தியா  மட்டுமின்றி வெளிநாடு வாழ் தமிழர்கள் கூட இங்கிருந்து முறுக்குகளை ஆர்டர் செய்து வாங்கி செல்கின்றனர்.  அக்., 18 ல் தீபாவளி  என்பதால் ஆர்டர்கள் குவிந்து வருகின்றனர்.      காசிவிஸ்வநாதன், கண்ணத்தாள் கூறியதாவது:  முறுக்கு சுடுவதற்கு சமையல்  எண்ணெய்யை ஒருமுறை தான் பயன்படுத்துவோம். இதனால் எளிதில் கெடாது. ஒரு படி அரிசி, கால்படி உளுந்தில் 50 முறுக்குகள்  வரை தயாரிக்கிறோம். ஒருமுறுக்கு 5 ரூபாய்க்கு கொடுக்கிறோம். கட்டுப்படியாகாத விலை என்பதால் பெரிய அளவில் லாபம்  கிடைப்பதில்லை. கூலி தான் கிடைக்கும். இருந்தாலும் பாரம்பரியமாக இத்தொழிலை செய்து வருகிறோம்.  தீபாவளிக்கு இரு வாரங்களே  இருப்பதால் ஆர்டர்கள் வரத் துவங்கியுள்ளன. சிங்கப்பூர், துபாய், குவைத் போன்ற வெளிநாடுகளுக்கும் அனுப்புகிறோம். பண்டிகைக்கு  மட்டுமின்றி விேஷச காலங்களிலும் ஆர்டர்கள் வரும், என்றனர். தொடர்புக்கு 97883 72870.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar