சந்திர கிரகணத்தன்று திருச்செந்தூர் கோயில் பூஜை நேரத்தில் மாற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2011 11:12
தூத்துக்குடி : டிச.,10ம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் முருகன் கோயில் பூஜை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அன்று மாலை 6.17 முதல் இரவு 9.43 மணிவரை சந்திர கிரகணம் நடக்கிறது. இதையொட்டி, மாலை 4 மணிக்கு கோயிலில் சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. மாலை 5 மணிக்கு மூலவர் சுப்பிரமணியர், உற்சவர் சண்முகர் மற்றும் இதர தெய்வங்களுக்கு பட்டு சாத்தப்பட்டு, கோயில் நடை அடைக்கப்படும். அதன்பின், பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. கிரகணம் முடிந்தபின், இரவு 10 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, புண்ணியஸ்தானம் நடக்கிறது. அதன்பின், பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். தொடர்ந்து, சுவாமி அஸ்திர தேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி, சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.