பதிவு செய்த நாள்
07
டிச
2011
11:12
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு இன்று பட்டாபிஷேகம் நடக்கிறது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நவ. 30ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏழாம்நாளான நேற்று காலை கங்காளநாதர் புறப்பாடும், மாலையில் தந்தத்தொட்டி வாகனத்தில் நடராஜ மூர்த்தியும், சிம்மாசனம், வாகனத்தில் சிவகாமி அம்பாளும், காமதேனு வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையும் புறப்பாடாகி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தனர்.(காமதேனு வாகனத்தில் சுவாமி எழுந்தருள்வது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே)
பட்டாபிஷேகம்: விழாவின் 8ம்நாள் நிகழ்ச்சியாக இன்று(டிச., 7) மாலை 6.15 முதல் 6.30 மணிக்குள், கோயில் ஆறுகால் பீடத்தில், சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. டிச., 8 காலையில் தேரோட்டம், மாலை 6.15 மணிக்கு மலைமேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து 16கால் மண்டபம் முன் சொக்கப்பனை தீப காட்சி நடக்கும். டிச., 9ல் தீர்த்த உற்சவம் நடக்கிறது.