பதிவு செய்த நாள்
10
அக்
2017
11:10
திருப்பூர் : திருப்பூரில், எலுமிச்சம் பழத்தில், பாம்பு போன்ற உருவம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர், பூ மார்க்கெட் பகுதியில், எலுமிச்சை வியாபாரம் செய்து வருப வர், பாலமுருகன். பழநி, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, மொத்தமாக விவசாயிகளிடம் எலுமிச்சம்பழம் வாங்கி வந்து, திருப்பூரில் விற்று வருகிறார். வழக்கம் போல், நேற்று வியாபாரத்துக்கு எலுமிச்சை களை அடுக்கி வந்த போது, படம் எடுத்து நிற்கும் நீளமான பாம்பின் உருவம் தத்ரூபமாக காணப் பட்டது. இதை பார்த்து, அருகில் உள்ள கடைக்கா ரர்களும், பொதுமக்களும் ஆச்சரியமடைந்தனர். வியாபாரி பாலமுருகன் கூறுகையில், ""எலுமிச்சையில் புள்ளிகள் இருக்கும். ஆனால், இதில் ஒரு பாம்பு வடிவம் முழுமையாக காணப்படுகிறது. அதிலும் எலுமிச்சம் பழத்தில் இருப்பது சிறப்பானதாகும். எனவே, இதை பூஜை அறையில் வைத்து பாதுகாக்க உள்ளேன், என்றார்.