புதுப்பொலிவு பெறும் பெரியநாயகியம்மன் கோயில் கதவுகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2017 11:10
பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயில் கும்பாபிேஷக திருப்பணியில் பழமை மாறாமல் கதவுகளை புதுப்பிக்கும் பணி நடக்கிறது.பழநி ஊர்க்கோயில் என அழைக்கப்படும் பெரியநாயகியம்மன் கோயிலில் தான் தைப்பூச திருவிழா நடக்கிறது. இக்கோயிலில் பாண்டியர், சேரர் கால மன்னர்கள் திருப்பணிகள் செய்துள்ளனர். கடந்த 1998ம் ஆண்டு கும்பாபிேஷகம் நடந்தது. கும்பாபிேஷக திருப்பணிகள் ரூ. 90லட்சம் செலவில் நடந்து வருகிறது. இதில் கிரானைட் தளம் அமைத்தல், கோயில் கற்சிலைகள், ஓவியங்கள் பழமை மாறாமல் புதுக்கும் பணிகள் நடந்து வருகிறது. அதில் ஒருபகுதியாக பழங்கால வேலைப்பாடு மாறாமல் சன்னதி கதவுகள் புதுப்பிக்கப்படுகிறது. அவற்றில் பொருத்துவதற்காக புதிதாக குமிழ்கள் செய்யும் பணி நடக்கிறது. கோயில் அனைத்து திருப்பணிகளையும் விரைவில் முடித்து வரும் தைப்பூசவிழாவிற்கு முன்னதாக மகாகும்பாபிேஷகம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.