பதிவு செய்த நாள்
04
நவ
2017
12:11
சேலம்: ஐப்பசி பவுர்ணமியொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில், அன்னாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், 26ம் ஆண்டாக அன்னாபிஷேக விழா நடந்தது. கா லை, மூலவர் கரபுரநாதர் பெரியநாயகி அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை, பலவித காய்கறி, 100 கிலோ அரிசியை சமைத்து, கரபுரநாதருக்கு அன்னத்தால் அலங் காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசி த்தனர். தொடர்ந்து, மனோன்மணி தேவியை, தேரில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளச்செய்து, பக்தர்கள் வடம்பிடித்து கோவிலை வலம் வந்தனர். அதேபோல், இடைப்பாடியில், வெள்ளார் நாயக்கன்பாளையம் பசுபதீஸ்வரர், ஜலகண்டாபுரத்தில் தோரமங்கலம் மாதேஸ்வரர், ஓமலூ ரில், செவ்வாய் சந்தை திடல் அருகே காசிவிஸ்வநாதர், கோட்டை வசந்தீஸ்வரர், கடைவீதி அண்ணாமலையார், அக்ரஹாரம் வைத்தீஸ்வரன், ஆத்தூரில், கோட்டை காயநிர்மலேஸ்வரர், கைலாசநாதர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், பேளூரில், தான்தோன்றீஸ்வரர், ஆறக ளூரில் காமநாதீஸ்வரர் உள்பட மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.