பதிவு செய்த நாள்
04
நவ
2017
12:11
ராசிபுரம்: ராசிபுரம், நித்ய சுமங்கலி அம்மன், செல்லாண்டியம்மன், ஆஞ்சநேயர் கோவில், திருவிழா, கடந்த, 24ல் துவங்கியது. வரும், 9, 10ல் தேரோட்டம் நடக்கிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த, ஆலோசனை கூட்டம், ராசிபுரம், தாலுகா அலுவலகத்தில் நடந்தது. சப் - கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்தார். குடிநீர், மின் விளக்கு, தற்காலிக கழிப்பிட வசதிகள், தடையில்லா மின்சாரம், தீயணைப்பு வீரர்கள் தயார் நிலை மற்றும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. செயல் அலுவலர் ராஜாகோபால், நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, தாசில்தார் ரத்தினம், டி.எஸ்.பி., ஈஸ்வரன் மற்றும் பொதுப்பணித்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.